உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

187

செந்நெறியினின்றும் துன்பத்தால் வழுக்காதது மட்டுமன்றி இன்பத்தாலும் வழுவாத செம்மை யுடையவராயிருந்தார்.

உலக மேம்பாட்டிலும் உலக மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிலும் அக்கரை உடையவராயிருத்தலே வீரர் வீர வாழ்வின் பொதுக் குறிக்கோள். அக் குறிக்கோளை நாடி உயிரைத் துறக்க ஒருக்கமாயிருப்பதும், அதற்கு வாய்ப்பளிக்கும் வீரர் செயல்களில் முடையவராயிருப்பதும், அதில் துணிச்சலுடன் எதிர்விளை வெண்ணாமல் குதிப்பதும் வீரர்களின் பண்பு ஆகும். ஏனெனில் இப்பண்பு புகழையும் கடக்க வேண்டிய பண்பு.

ஆர்வ

வீரருள் சிறந்த வீரர்கள் வெற்றி தோல்வி பற்றிச் சிந்திக்க மாட்டார்கள்; வாழ்வு மாள்வுபற்றியும் கருதிப் பார்க்க மாட்டார்கள். நன்மை தீமை ஒன்றனையே கணித்து நன்மையென்று தோன்றிய உடனே தயங்காது கடனாற்ற விரைவார்கள். ஆனால் இவ்வெல்லாச் செயல்களிலும் அவர்கள் புகழையே நோக்கமாகக் கொள்வது இயல்பு. பொதுவாகப் பார்த்தால் இதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் புகழ்தரும் செயலே உலகிற்கு நலந்தரும் செயலாகவும் பெரும்பாலும் அமையும். ஆகவே, புகழுக்கு உழைப்பதென்பதும் உலக நன்மைக்கு உழைப்பதென்பதும் வேற்றுமைப்பட்ட பண்புகளல்ல. ஆனா

னால் உலகுக்கு நன்மை செய்வதால் எப்போதும் எல்லாவிடத்திலும் புகழ் கிடைக்கும் என்று கூற முடியாது. உலகமறியா நன்மைகளில் நாட்டம் செலுத்தியவர்கள், உலகையே அடிப்படையில் திருத்த முனைபவர்கள், புகழை விரும்பாதது மட்டுமன்று. இகழ் பெற்றும் நலம் செய்ய முனைவதுண்டு. இத்தகையோர் உலகிற்கு நலம் பயக்கும் ஒரு குறிக்கோளே கொண்டு, அதனால் வருப்பயன் புகழோ இகழோ என்றுகூடக் கவலை யெடுத்துக் கொள்ளாது கடனாற்றுபவராவர்.

சில சமயம் நற்செயலின் விளைவு இகழோடுகூட நிற்பதில்லை. உலகின் இகழினும் கடுமையான செய்திகளும் உண்டு. அதனினும் பொறுக்க ஒண்ணாத செய்திகளும் உண்டு. தாம் நல்லார் பெரியார் எனக் கொண்டவர்கள் பழிப்பு, தமக்கினியார் உற்றார் இகழ்வு, உயிர் நண்பர் மாறுபாடு, தம் செயலால் தம்மைச் சார்ந்தோர் நல்லோர் தீய எண்ணமற்றோர்