192
||_ _.
அப்பாத்துரையம் - 46
நண்பரின் நேசத்தினும் இனியது எதுவுமில்லை. எவ்வளவு இன்பப் பேறுடையவனும் இவ்வின்பத்தை வெறுத்துவிட முடியாது. எவ்வளவு துன்பமுடையவனும் இவ்வின்பத்தை நாடாமலிருக்க முடியாது. இன்பத்திலும் துன்பத்திலும் அது மனிதரின் இன்றியமையாத் தேவையாகிறது.
நீ உலகில் வெற்றிபெற விரும்புகிறாய். உலகின் செல்வ நலங்களிலும் புகழ் நலங்களிலும் நீ உரிய பங்கைப் பெறவிருக் கிறாய். ஆனால் எந்த நலங்களிலும் முதன்மையுடைய நலம் நண்பரின் நேசம். நண்பரின் இன்சொல் சில சமயங்களில் நண்பரின் முன் துவர்க்கும் பின் இனிக்கும்' கடுஞ் சொல்தான். நலங்கள் நலிவுற்ற காலையிலோ, கேட்க வேண்டியதில்லை. நண்பன் சொல்லினும் ஆறுதல் மிக்க சொல் இல்லை. நண்பன் ஒத்துணர் வினும் வலிமையாவது வேறில்லை நண்பன் கையினும் உறதுணை தருவது எதுவும் கிடையாது. வாழ்விலும், தாழ்விலும், வாழ்க்கையின் விடியற்போதிலும், நண்பகலினும், மாலையினும், எக்காலத்தும் நீ இன்று கனவு காணும் நண்பர் நட்பு உனக்கு நனவாகக் கிட்டுமாயின், அது உனக்கு ஒரு தோன்றாத் துணையாக, தோலாவெற்றியாகவே இருக்கும் என்பது உறுதி.
நண்பர்கள் வாழ்க்கையின் நன்மை தீமைகளில் துணை தருபவர் மட்டுமல்லர்; நன்மை தீமைகளை ஆக்குபவர்களும் அவர்களே. ஒருவன் நல்லவனாயிருப்பதற்கும் கெட்டவனாவ தற்கும் அவன் நட்பும் தொடர்பும் காரணமாகும். இதனாலேயே உன் நண்பர்கள் யாரெனக் கூறு, உன் குண இயல்புகள் பற்றிப் பின் கூறவேண்டி வராது" என்ற பழஞ்சொல் எழுந்துள்ளது. மேலீடாகப் பார்ப்பதற்கு இப்பழஞ் சொல் ஒரு அணிந்துரை போல் தோற்றும். ஆனால் உண்மையில் அது முழுவாய்மையிற் குறைந்த உரையே. ஏனெனில், நண்பன் என்பவன் உண்மையில் வாழ்க்கையின் உயிர் போன்றவனே. நட்பு பிறப்புக்குப் பின் பிறப்பினும் இறப்பிற்குப் பின்னும் நிலவுவதாகும். அது டையிலே தொடங்கி இடையிலே முடிவதன்று. ஒரு நாள் ஒரு பொழுது நிலவுவதன்று. ஒரு வாழ்விடையே தோன்றி என்றென்றும் நிலவுவதாகும்.
நல்ல கனவார்வங்களுடைய நற்பண்பாளனே நட்பின் வகைமையறிந்து ஒரு நல் நண்பனைத் தேர்ந்தெடுக்க முடியும்.