உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210 |

அப்பாத்துரையம் - 46

துறையினரையும் திறைகொண்டு வாழ்வதை அவர்கள் காணவில்லையா? வாணிகத்திற்காகவே நாடுகள் ஒப்பந்தம் செய்வதும், கூட்டுறவு நாடுவதும், பகைத்துப் படு கொலைப் போர்களிடுவதும் அவர்கள் முற்றிலும் அறியாதவையா? அவர்கள் அவாவுறும் செல்வமும், செல்வப் பொருள்களும், நாகரிகப் பொருள்களும் வாணிகம் தரும் பொருள்களாயிற்றே!

இவ்வளவு சிறப்புக்களையும் அவர்கள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் உள்ளனராயினும், அத்துறையைப் பற்றிக் கனவு காணாததன் காரணம் என்ன? அத்துறை அவ்வளவு உயர்பண்புடைய துறையல்ல என்று அவர்கள் உள்ளூர எண்ணுவதனால்தான். இதை அவர்கள் நேரிடையாகக் கூற மாட்டார்கள். தம் பிள்ளைகளைப் பற்றிக் கருதாத இடத்தில், அவர்கள் வணிகரை மதியாமலிருப்ப தில்லை. முதல் மதிப்பு அவர்களுக்குத்தான் என்றுகூடக் கூறலாம். ஆனால் தங்கள் பிள்ளைகள், தங்கள் கண்போன்று தாம் வளர்க்கும் பிள்ளைகள் வகையில் அச்சிறப்புப் போதாது; அது பணம் பெருக்கும் சிறப்பு ஒன்று மட்டுமே; பண்பாட்டில், ஒழுக்க முறையில், ஆன்மிக முறையில் தாழ்ந்த தரம் சார்ந்தது என்ற எண்ணம் மட்டுமே அவர்களிடையேயும், வணிகர்களிடையேயும் கூடப்பரவியுள்ளது. உண்மையில் இதைவிடத் தவறான கருத்து இருக்க முடியாது.

சிறப்பாகச் சமயப்பற்று மிக்க தாய் தந்தையர் கனவுகள் வ்வகையில் நல்ல பிடிப்பினையாகும். தம் பிள்ளை சமயப் பணியாளனாக, சமய அறிஞனாக, சமய முதல்வனாக வரவேண்டும் என்று அவர்கள் கனவு காணின், அது இயல்பே. ஆல் பெரும்பாலோர் அத்துடன் அமைவதில்லை. அரசியல் துறை, மருத்துவத்துறை, அமைப்பியல் துறை (எஞ்சினியரிங்) ஆகியவற்றில் தம் கனாத்தேர் செல்வதை அவர்கள் சமயப்பற்றுத் தடுப்பதில்லை. அவையெல்லாம் சமயத்துறைக ளல்லவாயினும் அதனினும் பயனுடைய, மதிப்புடைய நாகரிக வாழ்வில் பேரளவு மதிப்பு வாய்ந்த துறைகள் என்பதனாலேயே அவற்றில் அவர்கள் நாட்டம் செல்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே சமயம் அவர்கள், அவை சமயத்துக்கு மாறல்ல; உலகியல் மதிப்புடனும், நாகரிகத்துடனும் அவற்றிலிருந்து கொண்டே சமயப் பற்றுடனும் வாய்மையுடனும் வாழ வகையுண்டு' என்று கருதுகின்றனர்.