வருங்காலத் தலைவர்கட்கு
211
ஆனால் வாணிகம் சமயத்திற்கு மாறானது, இவ்வடிப்படைப் பண்புகளுக்கு இடமற்றது' என்பது அவர்கள் கருத்து. அதனாலேயே அவர்கள் வணிகரையும் வாணிகத் துறையையும் மதித்தாலும் தங்கள் கனவுகளில், அதுவும் தம் வாழ்வைக் குறிக்கோளான தம் பிள்ளைகள் பற்றிய கனவுகளில், அதற்கு இடம்தரா திருக்கின்றனர். வணிகரும் இவ் உள்ளா
தப்பெண்ணத்தை ஏற்றுக் கொண்டவர்களாய், வாணிகத்தில் சமயமேது, ஒழுக்கமேது, வாய்மையேது என்று அடிக்கடி கூறுவதுண்டு. பல நாடுகளிலும் வணிகர் மனித வகுப்பின் இவ்வுள்ளார்ந்த வெறுப்பிலிருந்து, தம்மைப் பாதுகாத்துக் காள்ளவே சமயத் தலைவர்கள் உறவைப் பெரிதும் நாடுவதுடன், சமய நிலையங்களுக்கும் அறநிலையங்களுக்கும் மிகுதுணை தந்து வலிவுதேட முனைகின்றனர்.
வாணிகத்துறை ஆன்மிக, ஒழுக்க உயர்வுடையதன்று என்பதும் சரியன்று; சமயத்துறையே அதற்கு உகந்ததென்பதும் சரியன்று. உண்மையில் வாணிகத்துறைக்குரியதாகக் கருதப்படும் குறுகிய தன்னலம், அதனினும் மிகுதியாகச் சமயத் துறை யாளரிடம் இல்லாமலில்லை. சமயப் பற்றுடையவரிடையே கூடச் சமயத் துறையாளரின் மதிப்பு இதனாலேயே குறைந்து வருகிறது.ஆன்மிகத் துறை, ஒழுக்க நிலை இவற்றின் அடிப்படைச் சமயமே என்று பெரும்பாலான மக்கள் கருதி வருவதனாலேயே, அத்துறையாளர் மதிப்புக் குறைந்தும், அத்துறையின் மதிப்பும், சமயத்தின் மதிப்பும் குறையாதிருக் கின்றன. சமயத் துறையினர் உண்மையான ஒழுக்க உயர்வுடையராயிருந்தால் சமயம் இன்றைவிட மிகுதி மதிப்புப் பெறும் என்பதை உணர்பவர், அதே உயர்விருந்தால் வேறு எத்துறையிலும் அதேபோல மதிப்பு மிகும் என்பதையும் ஒப்புக் கொள்வர். பொருட் பெருக்கத்திற்கு வழியான வாணிகத் துறையில் இவ்வாய்மை இருந்தால், அது சமயத் துறையில் அவ்வொழுக்கம் இருப்பதினும் உயர்ந்தது என்பதையும் யாவரும் ஒப்புக் கொள்வர்.
சமயத்துறையில் இன்று புகுபவரிடம் வாணிக நோக்கம் மிகுதி உண்டு. வாணிகத்துறை புகுபவரிடம் சமய நோக்கு குறைவு என்பதும் உண்மை. ஆனால் இரு துறைகளில் இருப்பவருமே கனவாளராயிருந்தாலல்லாமல், மக்கட் பணியாளராயிருந்தாலல்