212
அப்பாத்துரையம் - 46
லாமல், ஒழுக்க உயர்வுடையவராயிருக்க முடியாது. அது மட்டுமன்று, மக்கட் பணியாளருக்குச் சமயத்துறையில் இருக்கும் வாய்ப்பைவிடப் பிற துறைகளில் வாய்ப்பு மிகுதி. சமய நிலையங்கள் கல்வியிலும் மருத்துவத்திலும் பிற பணிகளிலும் ஈடுபடுவதும் இதனாலேயே. இந்நோக்கமுடையவர் வாணிகத் துறையில் புகுந்தால், அவர்கள் உயர்வும் பெரும் பயனும் போற்றுதலும் பெறுவர்; பெறுவர்; வாணிகமும் உண்மையான வாணிகமாக, பரந்த மக்கள் தொண்டாக மாறும். வாணிகரினும் மேம்பட்ட உயர் பணியாளர் எத்துறையிலும் இருக்க மாட்டார்கள். தவிர, சமயத் துறையிலிருந்து கொண்டு ஒருவன் தன் வாய்மையின்மையை எளிதில் மறைக்க முடியும். மருத்துவம், அமைப்பாண்மை, கல்வித்துறையில் கூட மறைந்தொழுக முடியும். நேரிடை மக்கட் பணித்துறையான வாணிகத்தில் மறைப்பே நெறியாக இன்று போல் கொள்ளப்பட்டாலன்றி,மறைந்தொழுக முடியாது.மறைப்பு இத்துறையில் அவ்வளவு வெற்றியும் பெறாது. ஏனெனில் தங்கு தடையற்ற போட்டியும், கண்கூடான உயர்வு தாழ்வு வேறுபாடுகளை விளக்கமாக எடுத்துக் காட்டும் திறனும் உடைய துறை இதுவே.
உ
வாணிகத்தின் அடிப்படைப் பண்பு பற்றியும் மக்கள் தவறான கருத்துக் கொண்டிருப்பதன் காரணம் அத்துறை யிலுள்ளோர் வெளிப்படையாகத் தந்நலம் கருதியவர்களாகக் காட்சியளிப்பதே. ஆயினும் அத்துறையின் உயர்வும் இதுவே. வெளிப்படையாக அன்றி, மறைத்து வாழ முடியாத துறை அது. வாய்மை யில்லாதவனால்கூட அதில் எவ்வளவோ நன்மை செய்ய முடிகிறது.வாய்மையுடையவரால் இன்னும் எவ்வளவோ முடியும்.
வாணிகம் உண்மையில் ஒரு மக்கட் பணி; ஓர் உலகப் பணி. அதனால்தான் அது நாகரிகத்தின் அடிப்படையாயுள்ளது. அதன் போட்டியிடையே நேர்மையுடையவன் வெற்றி பெறுவான்; நாணய முடையவன் வெற்றி பெறுவான். ஒற்றுமையுடையவன் குழு வெற்றியடையும். ஆனால் போர் வலுக்கும் வரை எல்லாத் துறைகளையும் போல, பலமுடையவர்க்கும் அதில் இடமுண்டு.
உன்போன்ற கனவாளர், அதிலும் வாணிகம் ஒரு மக்கட் பணிக்கான துறை என்று கருதக்கூடிய ஒரு கனவாளர்