உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

213

அத்துறையை அணுகினால்தான், அணுகுபவர் வெற்றி பெறுவார். புகழும் அடைவர். அதுமட்டுமன்று; வாணிக முறை சமயத்துறையை விட ஆன்மிக முறையிலும் தாழ்ந்ததன்று; உயர்ந்ததே' என உலகு எளிதில் அறிந்து கொள்ளும்.அம்முறையில் சில கூறுவோம்.

மைக்கேல் ஏஞ்ஜெலோ 14ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் இருந்த உலகக் கலைஞன். அவனை ஒத்த சீனக் கலைஞனை எந் நூற்றாண்டும், எந்நாடும் கண்டதில்லை. அவ் ஓவியங்களை வாங்கித் தம் இல்லங்களை, கோயில்களை, கலைக் கூடங்களை அணி செய்ய விரும்பாத செல்வர், மன்னர், தேசத் தலைவர் இல்லை. ஆனால் இத்தகைய கலைஞன்கூடமாக விளங்கிய கலை நகரமாக, ஃவிளாரன்ஸில் தானும் ஒரு பகுதி சுவர் கட்ட வேண்டுமென்னும் ஆவலால், தன் கலையை விட்டுக் கொத்தனாய்ச் சென்றானாம். கோயில்களுக்கு சிறப்புத் தருவதாகக்கொள்ளப்படும் கலையின் படைப்பாளன் மக்கள்வாழ் நகரக்குச் சுவரெழுப்புவதில் கொண்ட பெருமையைக் காண்க!

வாழ்க்கையில் பயன்படும் அளவுக்குத்தானே சமயமும், கலையும், ஒழுக்கமும் உயர்வு பெறக்கூடும்? அவ் வாழ்க்கைக்க நேரிடையாகப் பயன்பெறும் பொருள்கள் யாவும், சமயத்துறை யாளர்க்கு, கலைஞர்க்கு, அரசியலார்க்குப் பயன்படும் பொருள்கள் யாவுமே வாணிகத்தால் பெறப்பட்டவைதானே? உலகில் வாணிகம் குறைந்தால் கூட சிறிது தடைப்பட்டால் கூட ப் பொருள்கள் யாவற்றிலும் முட்டுப்பாடு ஏற்பட்டு, நாகரிகம் வளர்ச்சியற்றுப் போகுமன்றோ! இத்தகைய வாணிகத்தை உலக நலன் கோரிச் செய்வதிலும் உயரிய பணி இருக்க முடியுமா?

"வாணிகத் துறைக்கு நான் செல்லப் போவதில்லை! நான் என்ன அவ்வளவு தன்னலவாதியா? வேறு திறங்கள் அற்றவனா?” என்று உன் தோழர் சிலர் கூறுவதை நீ கேட்டிருக்கலாம். இது எவ்வளவு பேதைமை! வாணிகத்துக்கு வேண்டும் திறனிலும், திறத்திலும் உயர் திறனும், திறமும் எங்கே இருக்க முடியும்?

வாணிகமின்றேல் கலைஞருக்குத்தூரிகையும் சாயமுமிராது. அவர்கள் கலைப் பொருள்களுக்கு விலை இராது. கோயில்களில் வழிபாடிராது. மக்களுக்கு உணவு முட்டுப்படும்; உடை