உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 46

214 || தட்டுப்பாடு ஏற்படும். புகைவண் டி, கப்பல், வானூர்தி மட்டுமன்று, குதிரை வண்டியும், பொதிமாடும் கூட இராது. அவ்வவ்விடத்தார் அவ்வவ் விடத்துப் பொருள்களைக் கொண்டு வாழவேண்டி வரும். கல்வித் துறையில் நூல்கள் இரா; விவிலியநூல் அறிவுகூடப் பரவாது. இந்நிலையை யார்தாம், எந்தச் சிறுவன்தான் விரும்ப முடியும்? இந்த நிலையை மாற்றும் வாணிகமா தாழ்ந்த துறை?

ஆகவே வாணிகம் வாணிகம் செய்வார்க்கு’ நல்ல வாணிகம் மட்டுமன்று; உலகிற்கும் நல்ல வாணிகமே. உலக நோக்குடையவர் அதனை நடத்தினால், அது அரசியற் பணியிலும் சமயப் பணியிலும் சிறந்ததாகும் என்ற கருத்துடன் நீ வாணிகக்களம் புகுக. இன்று உலகின் தொலைவெல்லை மிகமிகக் குறுகிக்கொண்டு வருகிறது. இது வாணிகத்தின் செயல், அரசியலின் செயலன்று. அரசியல் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறது, அவ்வளவுதான்.வாணிகம் ஓருலகு' உண்டுபண்ணப் பெரிதும் உதவுகிறது. சமயம் இதனைச் செய்து முடிக்கவில்லை; முடிக்க உதவியதாகக் கூட யாரும் கூற முடியாது. அதை விரும்புவதாக மட்டுமே வாய் வேதாந்தம் கூறி வந்துள்ளது. வாணிகம் இந்நிலையை எவ்வளவு தொலைவு தொலைவு வற்புறுத்தி வருகிறது இன்றைய வணிகர்களின் தன்னலத்திடையே கூட, அத்தன்னலத்தைக் கடந்து இதனை வற்புறுத்தி வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

கென்ட்மாவட்டத்திலுள்ள மருந்துக் கடைக்காரனுடைய புட்டிகள் ஒருநாள் வெறும் புட்டிகளாய் விடுகின்றன. அதை நிரப்பும் மருந்து கிடைக்க வழியில்லை. ஏன்? நடுநிலக் கடலில் போர். துருக்கிய நாட்டவர் மருதும் பூண்டு வளர்க்கவும் முடியவில்லை. இருப்பதை நடுநிலக் கடல்வழி அனுப்பவும் முடிய வில்லை! லங்காஷயர் வட்டத்தில் தொழிலாளர் அவதியுறு கின்றனர்.ஏன்? இந்தியாவில் பருவமழை தவறிப் பெய்துவிட்டது. பருத்திப்பயிர் சேதமடைந்துவிட்டது! சிலசமயம் எங்கோ உலகின் கோடியில் ஒரு துறைமுக ஆட்சியில் சிறிது சச்சரவு. மறுகோடியில் அதன் வாணிகக்கள எதிர் அலைகள் காணப்படு கின்றன. இங்ஙனம் உலகை ஒன்றுபடுத்தும் ஆற்றலுடைய கருவியை, தொலையை மட்டுமன்று, இனம், மொழி, நாடு ஆகிய