உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

215

எல்லைகளைத் தாண்டிக் கடலும் நிலமும் மலையும் கடக்கும் ஆற்றலுடைய சாதனத்தை, வேறு எத்துறையில் காண முடியும்?

பிரிட்டனை ஆளும் பொறுப்பில் ஒரு பங்கு கொள்ளும் அரசியல் மன்ற உறுப்பினர் பணி உயர்வானதே. ஆனால் அவருக்குத் தலைவலி உண்டானால், பிரிட்டனுக்கு அது தலைவலியாய் விடாது. நேர்மாறாக, ஒரு தொழிலாளி ஓரிடம் வேலை நிறுத்தினால் அதன் அளவில் நாடெங்குமன்று, உலகெங்கும் விலை ஏற்றத் தாழ்வு ஏற்படும். சில இடங்களில் இதன் பேரளவு விளைவைக் காணலாம். ஒரு தொடர்வண்டி யோட்டி நோய்ப்பட்டால் எத்தனை பேர் பயணம் அன்று நின்றுபோகும். அதன் தொலைவிளைவுகள் எத்தனை பேரைப் பாதிக்கும்? தொழிலைவிட இவ்வகையில் வாணிகத் தொடர்பு முக்கியமானது. ஏனெனில், பல இயற்கைப் பொருள்களும் செயற்கைப் பொருள்களும் உலகின் ஒவ்வொரு பகுதிக்குள் கட்டுப்பட்டுள்ளன. வாணிகத் தொடர்பு அறுந்தால் தொழில் வளமாய் இருந்தும் பயனில்லை. விளைவு மிகுதியாயிருந்தும் பயனில்லை.

ஒப்பற்ற

மக்கட்பணியாக

ஆனால் வாணிகம் வேண்டுமானால், மக்கட்பணியென்ற கருத்துடனே நீ அதில் இறங்க வேண்டும். உன் ஆதாயத்தை அத்தொழிலின் வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் ஊதியமாக மட்டுமேநீ கருத வேண்டும். இம் முறையில் ஒருவன் வாணிகம் நடத்தினால் போதும். அவனைப் பிறரது போலி வாணிகம் வெல்ல முடியாது. அம் மரபு உலகில் பரவினால், தன்னல வாணிகம் ஒழியும். வாய்மைக்குச் சமயம் ஒரு சான்றுச் சொல்லாயிராது, வாணிகம் அதற்குத் தலைசிறந்த மேற்கோள் சொல்லாய்விடும். சமய வாய்' என்ற தொடர் போய், வாணிக வாய்மை' என்ற தொடர் வழக்கில் வந்துவிடும்.

இது பகற் கனவன்று. நல்ல நனவாகக் கூடிய கனவே நாணயமான வாணிகம்' என்று வணிகர் விளம்பரம் செய்வது காண்க. நாணயம் விளம்பரப்படுத்தி ஆதாயமடையத்தக்க சரக்கானால், அதனை உண்மையாகவே பின்பற்றினால் எவ்வளவு ஆதரவு கைவரக்கூடும்.