உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

217

தாண்டிச் சென்றுவிட அவன் காலமானான்.இவ்விரு தவறுகளும் அவன் செய்திராவிட்டால், இன்று உலகில் ஃபிரான்சு முதல் வரிசையிலுள்ள நாடாய் மட்டுமிராது! முதல் வரிசையென ஒன்றில்லாத முதல் நாடாகவே இருந்திருக்கும். உலகும் இன்று இன்னும் நெடுந்தொலை முன்னேறி இருக்கும்.

நெப்போலியனிடமிருந்து நீ படிக்க வேண்டிய பாடம் இது; நீ நெப்போலியனைப்போல் உன் துறையில் ஒருமுகப்பட்டுக் கருத்து முனைந்துநின்று, அதன் முனைப்பான கருத்துக்களைக் கைக்கொள்; ஆனால் அதே சமயம் அவனைப்போலப் பிற துறைகளை அசட்டை செய்யாதே! சிறப்பாக வாணிகத் துறையில்தான் குறுகிய செயல் வெற்றிக்கு மிகவும் அடாதது என்னல் வேண்டும்.

பயன்படுத்து.அறிவுத்

ணர்ச்சியை அறிவுடன் துணையற்ற உணர்ச்சி வாழ்க்கையில் நன்றன்று. வாணிகத்தையோ அது அழித்தேவிடும். நல்லவனாகவே இரு. ஆனால் திறமை யுடையவ னாயிரு. ஏமாற்றாதே; ஆனால் ஏமாறாதே. தீமை செய்யற்க; ஆனால் எக்காரணத்தாலும் தீமைக்கு உடந்தை யாகவும் இராதே. தீமையை எதிர்க்காவிட்டால், உடந்தையாய் இருந்ததாகத்தான் பொருள். களவு, கொலை, கள், சூது, வஞ்சகம் ஆகியவை பொது வாழ்க்கையிலேயே தீமை கொடுப்பவை. ஆனால் வாணிபத்தில் அவை தொழிலை யழிப்பதுடன் நிற்கமாட்டா. சுற்றத்தாரையும், சூழ்ந்தாரையும் அழித்து மீளாப் பழி உண்டாக்கி விடும்.

உலகில் எதற்கும் விலையிடுபவன் வணிகன். அவன் நினைத்தால் புகழுக்கும் விலை தர முடியும். ஆனால் அவன் புகழ்பெற முடியுமானால், அவன் பொருள்களில் மிக விலை உயர்ந்த பொருள்; அவன் முதலீட்டில் அழிவற்ற, ஆக்க மிக்க முதலீடு அப்புகழல்லாது வேறு எதுவாயிருக்க முடியும்! வாணிகத்துக்கு வளர்ச்சி விளம்பரம் என்பதன் முழு உண்மை துவே. இன்று விளம்பரம் என்பது போலிப் புகழ் நாட்டமாகவே செயலாற்றுகிறது. அது உண்மை வாய்ந்த புகழாய்விடின், விளம்பரம் சிறு அளவிருந்தாலும் போதும் இல்லாவிட்டால் கூடக் கேடில்லை. அவ்வாய்மையே ஒரு விளம்பரமாய்விடும். வணிகன் தொண்டு செய்வதனால் உலகு அவன் உலகாய்விடும்.