உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(218

அப்பாத்துரையம் - 46

அவன் வைத்தது சமயம். அவன் வகுத்தது அரசியல் என்ற நிலை ஏற்படும்.

நேரத்தைப் பயன்படுத்துவதைப்பற்றி உனக்குக் கூற வேண்டி இராது. வாணிகக் கனவு காண்பவன் அதனைப் புறக்கணித்திருக்க முடியாது. சொல் தவறாமை, வாய்மை தவறாமை, இன்சொற் கூறல், நயநாகரிகம் ஆகியவை பொதுவான ஒழுக்க முறையாயினும், பரந்த நற்றொடர்புக்குரிய வாணிகத்துறையில் இன்றியமையாச் சிறப்பொழுக்கம் என்பதனை அறிக. துறவியரிடம் தீயுணர்ச்சியிருப்பது எவ்வளவு பொல்லாங்கானதென்று கருதப்படுகிறதோ, அதனினும் பன்மடங்கு வணிகரிடம் அது இருத்தல் தீது என்பதை ஓர்க. உன்கடன் ஆற்றுவதினின்றும் என்றும் பிறழற்க; உன் பொறுப்பு எல்லையுள் வந்து, உன்மீது குறை சுமத்தப்பட்டாலன்றிப் பிறர் கடமையைப் பற்றிக் குறை கூறாதே. அதே சமயம் பொதுக் கடமைகளில் உன் நடை மூலமும், கூடியமட்டும் அன்புரை மூலமும் தேவைப்பட்டால் அன்புடன் கூடிய கண்டிப்பின் மூலமும் தவறுகளைக் காட்டவும் தயங்காதே. உன் உயர்வுக்கு முனைக; ஆனால் அதில் பிறர் உரிமை, பிறர் உயர்வு குறுக்கிட்டால், அவர்கள் நலன் உன்னுடைய உன்னுடைய நலனைத் தகையும்வரை முனையாது பொறுத்திருக்க. பிறர் நலத்துக்கு வழி விட்டுத் தந்நலமும் கருதிக் கொள்ளும் அறிவுத் தகைமையே வாணிகத் துறையினர் அறிவறிந்த முன்னேற்றத்தின் மறைதிறவு.

வாணிக உயர் கனவுத்துறை (Speculation) பொதுமக்கள் பார்வையில் சூதாட்டமாகத் தோன்றும். உண்மையில் இன்று தந்நலங்கருதும் சூதாடிகளே அத்துறையிலிறங்கி, அதை முழுக்க முழுக்கச் சூதாட்டமாக்கியுள்ளனர். ஆனால் பொதுநலக் கருத்துடன் இது செய்யப்பட்டால், அதன் நன்மை பெரிது. அந்நிலையில் அது சூதாட்டமன்று, அறிவாட்டம். அதிலிடும் முதலீடு இழத்தற்கு ஒருக்கமான மேற்படையான உன் சிறு செலவாய் இருக்க வேண்டும் வாழ்க்கையின் இன்றியமையாத் தேவை போக, மீந்ததன் ஒரு பகுதியிலேயே இவ்வறிவாட்டம் நடைபெற வேண்டும். இதில் இழப்பு வந்தால் சோர்பவர் எல்லோரும் முன்கூட்டி ஆராயாது தேவைப் பொருளை அதிலிட்டவர், அல்லது தந்நல அவாவினர் ஆவர். அதிலிடும்