உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

223

வர்கள் ஆற்றிய வெற்றிகள் அன்று நின்றழியும் போர் வெற்றிகளல்ல; நின்று பயன்தரும் நிறை புரட்சிகள் ஆகும்.

நீ முதல் அமைச்சராகக் கனாக் காண்பதும் ஆட்சி யாளனா யிருப்பதற்காக மட்டிலுமன்று. அது சிறப்புத் தராது. எவனும் ஆட்சியாளரா யிருப்பதற்குக் கூட அதைவிடச் சற்று உயர்வான கனாக் காண வேண்டும்; அதை விடச் சற்று உயர்வான தகுதி பெற வேண்டும். ஏனெனில் நாட்டில் கோடிக் கணக்கான மக்கள் உள்ளனர். ஒருவர் தாம் முதலமைச்சராக முடியும். சிறப்பில்லாமல் வெறும் ஆட்சியாளரா யிருந்தவர் களெல்லாம், சிறப்பான தகுதியிருந்தும் முழு வெற்றிபெறாது தோல்வியுற்ற வர்களே. ஆகவே உன் தகுதி பெரிதாயிருக்க வேண்டும்; அது வெற்றி பெற நிறைவேறுவதற்கான வகை துறைகளையும் நீ நாடல் வேண்டும்.

உன் கனாவின் ஆர்வம் முன் தள்ள, உன் தகுதி உனக்குத் துணை தர, உன் தளரா முயற்சி உன்னை முன்சென்றீர்க்க, நீ நாலரைக் கோடிமக்களிடையே முனைந்து முனைந்து சென்று, நாலரைக் கோடியையும் தாண்டிச் சிறிது காலம் முதல்வனா யிருக்க வேண்டும். அச் சிறிதளவு காலத்தில் நீ செய்யும் அருஞ் செயல்கள், காட்டும் அரிய பண்புகள் நாலரைக்கோடி மக்கள் வாழ்வை உயர்த்துவதுடன் உன் வழியில் பின்னால் வரும் பிற பல முதல்வர்களுக்கும் வழிகாட்டியாக அமைய வேண்டும்.

என்று

உன் கனா மிகப் பெரிதாய் விட்டதே மலைக்கிறாயா? மலைக்க வேண்டியதில்லை. நாலரைக் கோடி மக்கள் இந்நாட்டில் இருக்கிறார்கள். இதற்கு முன்பும் கிட்டத் தட்ட இதே அளவு மக்கள் எப்போதும் இருந்து வந்துள்ளார்கள்; இனிமேலும் இத்தொகைக்குக் குறையாமல் இருப்பார்கள். முதலமைச்சர் ஆகிறவர்கள் இவர்களிடையிலிருந்துதான் வரவேண்டும். அதன் கனா இவர்களனை வருக்கும் உரியது. அதனை நிறைவேற்றி முதலமைச்சராக ஒருவரை ஆக்குவதும் இவர்களே. முதலமைச்சருடன் ஒத்துழைத்து, மற்ற எல்லாப் பணிகளும் ஆற்றுபவர்களும் இவர்களே. ஆகவே முதலமைச்சராக வேண்டும் என்று கருத வேண்டியவர்கள் எல்லைக்குள்ளேயே நீயிருக்கிறாய். அந் நாலரைக் கோடி மக்களும் கருதும் ஒன்றைக் கருத வேண்டும் ஒன்றை நீ ஏன் கருதக்கூடாது? அந் நாலரைக்