224 ||
அப்பாத்துரையம் - 46
கோடியில் ஒருவன் பெறுவதை நீ ஏன் பெறக் கூடாது? மேலும் அது வேறு யாராயிருப்பதையும் விட, அதுபற்றிக் கனவுகாணும் நீயாயிருப்பது நலன்றல்லவா? அது உனக்கும் நன்று, உன் நாட்டு மக்களாகிய நாலரைக்கோடி மக்களுக்கும் நன்று. ஏனெனில் நீ அதில் சிறப்படைந்து, நாட்டு மக்களுக்கு வாழ்வில் சிறப்பும் நிலையான புகழும் அளிக்கலா மல்லவா?
பிரிட்டன் உலகை ஆளுகிறது. பிரிட்டனின் நாலரைக் கோடி மக்களும் உலகை ஆட்டிப் படைக்கிறவர்கள். அத்தகைய பிரிட்டனை ஆளவிருக்கிறாய். உலகை ஆளும் பிரிட்டீஷ் மக்களை ஆள நீ கனவு காண்கிறாய். இது உயரிய கனவே. இக் கனவார்வமே உன்னை மற்றவர்களை விட முந்திக் கொள்ளச் செய்யும். நீ நாட்டு மக்களுக்குப் பணி செய்து அவர்கள் உள்ளங்கவர்ந்து, அவர்கட்கு நல்வழி காட்டி, அவர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடுமானால், இந்நாட்டின் எந்தச் சக்தியும் நீ முதலமைச்சராவதி லிருந்து உன்னைத் தடுக்க முடியாது.
முதலமைச்சராவதற்கு உனக்குத் தகுதி இல்லையா? ஏன் இல்லை! அடிப்படையான தகுதிகள் பல உன்னிடம் உள்ளன. ஆனால் முதல் முதல் தகுதி இதுதான் நீ மனத்தில் எண்ணியதை வெளியில் உரைக்கிறாய்; உன் மொழிகள் வாய்மையுடையன என்பதே. சாக்ரட்டீஸ், இயேசு முதலிய உலகப் பேரறிஞர் தனிப்பெரும் சிறப்புக்கள் கூட இவைதான்; வேறு எவையும் அல்ல. அத்துடன் நீ வீரமும் துணிவும் உடையவன். எந்த இன்னலுக்கும் இடையூற்றுக்கும் அஞ்சி நீ உன் செயலில் தயங்கப் போவதில்லை. நீ தன் மதிப்புடையவன். சிறுமைத்தனமான செயல் செய்ய உன் மான உணர்ச்சி இடங்கொடாது. நீ வாய்மையும் நேர்மையும் உடையவன்; பொய் கோழைமைத் தன்மையை நீ வெறுக்கிறாய். வெற்றி பெற்றபின் எண்ணிப்பார்த்துக் கழிவிரக்கங் கொள்ளத்தக்க எதுவும் உன் முன்னேற்றப் பாதையில் குறுக்கிடாது.
பேசும்
தவிர, முதலமைச்சராக வேண்டும் என்ற கனவு காண்பதற்கு முன்னிருந்தே நீ அக்கனவு காணத் துணிந்துவிட்ட காரணத்தினாலேயே உன் வாழ்க்கையில் பல சிறுதிறப் பண்புகளைப் பெற்று விட்டாய். அவற்றைப்பற்றி உன்போன்றவர்