உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




226

அப்பாத்துரையம் - 46

உன் கட்சி எப்போதும் நேர்மையுடையதாயிருக்கும் என்று நம்பு; நேர்மையுடையதாயிருக்கும்படி பார்த்துக் கொள்; அதுபோலவே உன் கட்சியே எப்போதும் வெல்லும் கட்சி யென்று நம்பு; வெல்லும் படி பார்த்துக்கொள். இதன் பொருள் நீ என்றும் ஒரு கட்சியைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதும் அல்ல, உன் கட்சி எப்போதும் வெல்லும் என்பது அல்ல. உன் கட்சி தவறு செய்யலாம், எதிர்க்கட்சி நேர்மையாயிருக்கலாம். உன் கட்சி தோற்கலாம். எதிர்க்கட்சி வெல்லலாம். ஆனால் நீ எப்போதும் நேர்மையுடைய வனாயிருந்தால், நீ சாரும் கட்சி எப்போதும் நேர்மை யுடையதாயிருக்கும். நேர்மைக்கே இறுதி வெற்றி கிடைப்பது உறுதி. ஆகவே நீ சார்ந்து ஆதரவு செய்யும் கட்சிக்குக் கட்டாயம் வெற்றி கிடைக்கும். அதன் தோல்வியும் அதன் வெற்றிக்கு, அதாவது நேர்மையின் இறுதி வெற்றிக்கு வழிவகுத்தே தீரும்.

கருத்து மாறுபாட்டின் அடிப்படையிலன்றி உன்னிடம் எந்தக் கட்சி மாறுபாடும் செயல் மாறுபாடும் சொல்மாறுபாடும் இருக்கக் கூடாது. எத்தனை தடவையோ என் கருத்து மாறிய துண்டு. ஒரு தடவைகூட என் மொழி ஆதரவு (vote) மாறிய தில்லை” என்று கூறிய அரசியல் மன்றப் பெரியார் உரையை நீ மனத்துள் பதிய வைத்துக் கொள்.

உன் நலனைவிட உன் கட்சி நலன் பெரிது. உன் கட்சி நலனை விட உன் நாட்டு நலன் பெரிது. நாட்டின் மிகப் பெரும்பாலான மக்கள் நலனே நாட்டுச் செல்வமும், வீரமும், வெற்றியும் தருபவர்கள் நலனே எப்போதும் நீ கருதும் நாட்டு நலனாய் இருக்க வேண்டும். அந்நலனுக்கு எதிராக உன் ஆற்றல் பயன்பட விருப்பதாக இருந்தால், நீ அவ்வாற்றலைக் கைவிட, முதலமைச்சர் இடத்தையே துறக்க, தயங்கக் கூடாது.

நாட்டுக்கு அடிப்படைத் தேவைகளான பெருநெறி களிலேயே உன் கவனம் செல்லட்டும்; சிறு செய்திகளில் மனம் செல்ல வேண்டா. சிறு ஒற்றுமை வேற்றுமைகளுக்காகவும் நீ ஆதரவு, எதிர்ப்புச் செய்யக் கூடாது. அடிப்படை ஒற்றுமை வேற்றுமை காரணமாகவே நீ கட்சிகளுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் செயலாற்ற வேண்டும். கூடிய மட்டும் நீ யாரையும் புண்படுத்தக் கூடாது. ஆனால் பிறரைப் புண்படுத்த வேண்டுமே