(228
அப்பாத்துரையம் - 46
கொண்டேயிருக்க வேண்டும். இப்பகுத்தறிவையே நாம் அறிவின் அறிவு என்று கூறுகிறோம்.
முற்காலங்களில் பள்ளிகளில் செய்திகள் பற்றிய அறிவே கற்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது பகுத்தறிவு அதாவது சிந்திக்கும் அறிவு காரண காரியம், ஒற்றுமை வேற்றுமை ஆராயும் அறிவே தூண்டிவிடப்படுகிறது. மக்கள் எவ்வளவு அறிந்துள்ளார்கள் என்பதைவிட, எவ்வளவு சிந்திக்கிறார்கள் என்பதே முக்கியமானது. அரசியல் வாழ்விலும் சரி, கல்வித் துறையிலும் சரி, நீ பரப்பும் அறிவும் நீ பெறும் அறிவு இதுவே ஆக வேண்டம்.
அறிவு வகையில் கூறப்பட்ட இதே உண்மை செல்வத்தின் வகையிலும் பொருந்தும். ஒரு மனிதன் செல்வம் பெறுவதும், நாடு செல்வம் பெறுவதும் மரம் காய்கனி வளரப் பெறுவதுபோலவே. ஒரு மரம் காய்ப்பதென்றால் அதில் காய்களைக் கொண்டு ஒட்ட வைப்பதல்ல. அது தானாக வளர்வதற்கான சூழ்நிலைகளை உண்டு பண்ண வேண்டும் என்பதே. அதுபோலப் பொருளீட்டு பவனும் தானாகவே ஈட்டும் திறன் பெற்றாக வேண்டும். வெளியாரோ, அரசியலோ செய்வதெல்லாம் மரத்திற்கு நீரும் உரமும் இட்டுக் களையெறிந்து பாதுகாப்பதுபோல, செல்வம் ஈட்டும் தொழிலா ளனுக்கு நல் உடல்நலமும் அறிவு நலமும் தக்க சூழ்நிலையும் தருவதேயாகும். முதலமைச்சனென்ற முறையில் நீயும், உன்வழியில் நிற்கும் அரசும் மக்களுக்குச் செய்ய வேண்டுவது இதுவே.
நீ நாடாள்பவனாய் விட்டாலும், உன் நாட்டாட்சியின் தொடக்கம் உன் வீட்டாட்சியிலிருந்து தோன்றிற்று என்பதை நீ மறக்கக் கூடாது. நாட்டுக்கு உழைப்பது வீட்டை வெறுப்பதற் கன்று. வீட்டின் நலன் பெருக்கவே. ஆகவே தனி மனிதன் நலனையோ, உணர்ச்சிகளையோ, குடும்ப நலனையோ, குடும்ப உணர்ச்சிகளையோ நீயும் விட்டுவிடக் கூடாது; பிறரிடமும் அவ்வுணர்ச்சிகள் புண்பட நடக்கக் கூடாது. அரசியல் ஆற்றல் தனி மனிதன் ஆற்றலுக்கும் குடும்ப ஆற்றலுக்கும் மேற்பட்டதா யிருப்பது உண்மையே. ஆனால் அதன் உரிமைகள் அவற்றின் உரிமைகளுக்கு மேற்பட்டவையல்ல. உண்மையில் தனிமனித, குடும்ப உரிமைகளைப் பாதுகாப்பதற்கே அரசியல்