வருங்காலத் தலைவர்கட்கு
(229
அமைந்துள்ளது. அவற்றின் பாதுகாப்புக்காக, அவற்றின் ஆற்றல்களில் பெரும்பகுதியை அவற்றின் இணக்கத்துடன் பெற்றே அரசியல் இவ்வளவு பேராற்றல் வாய்ந்ததாயிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டால் நீ மனித உணர்ச்சி, குடும்ப உணர்ச்சிகளைப் பேணுவதுடன் பிறர் தன்னலங்களைப் பேணவே தற்காலிகமாக நீ உன் தனி நலனை விட்டிருக்கிறாய் என்ற உணர்வும் பெறுவாய். இதுவே அரசியற் பணியாளனின் நடுநிலை உணர்ச்சிக்கும் நேர்மைக்கும் சரி ஒப்பான நடுநிலை ஆகும்.
நாட்டின் தாயகமான வீடு கடந்தும் வீட்டு உணர்ச்சியை நீ விடாதவாறு போலவே, நாட்டின் முதலமைச்சனென்ற முறையில் நீ நாடு கடந்து நாட்டினம், நேசநாட்டுக்குழு, நேச நாட்டுக்குழுக் கடந்து உலகு ஆகிய மிகப் பரந்த எல்லைகளை அடைந்தாலும் அவற்றிற்கு அடிப்படைத் தாயகமாக நமக்குதவும் நாட்டுணர்ச் சியையும், நாட்டு நலனையும் நீ புக்கணித்தலாகாது. உலக வாழ்வின் தாயகம் நாடு. நாட்டு வாழ்வின் தாயகம் வீடு என்பதை உணரும் உனக்கு, உலக வாழ்வில் நீ பங்கு கொள்ளும் படியான நிலையை உன் நாடும், நாட்டு வாழ்வில் பங்கு கொள்ளும் நிலைமையை உன் வீடும் தாம் அளித்துள்ளன என்பது நன்கு புலனாகக்கூடும். அத்தகைய நாட்டையும் வீட்டையும் பெற்றிருப்பதை நீ எண்ணிப் பார்த்தால் நீ அந்நாட்டுக்கும் வீட்டுக்கும் கட்டாயம் உண்மை உள்ளவனா யிருப்பாய். அத்துடன் அத்தகைய நாட்டையும் வீட்டையும் தந்ததற்குக் கடவுளிடம் நன்றியுடையவனாயும் இருப்பாய்.
ஆனால் அறிவுடையவன் என்ற முறையில் உன் கடமைகள் இவற்றுடன் தீர்ந்துவிடுமா? உனது நாட்டை ஒத்த நாடில்லாதவர் களிடம் நீ பரிவும் ஒத்துணர்வும் காட்ட வேண்டாவா? பிற நாட்டு நலன்களுக்கும் உழைத்து எல்லா நாடுகளும் உன் நாடு அடையும் நன்னிலையை அடைய உதவாவிட்டால் நீ இத்தகைய நாட்டில் பிறந்து என்ன பயன்? அதுபோலவே, உன் நாட்டினும் உன் வீட்டை ஒத்த வீடுகள் மிகப் பலவாய் இருக்க முடியாதென்பதை நீ எண்ணிப் பார்க்க வேண்டும். இருந்தால் அவ்வீட்டிலுள்ள பிள்ளைகளனை வருக்கும் உன்னைப்போல முதலமைச்சராகும் கனவு தோன்றி யிருக்கும். இக்கனவு தானாக எங்கும்