உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(230

அப்பாத்துரையம் - 46

தோன்றுவதன்று. இக்கனவு தானாக எங்கும் தோன்றுவதன்று. அதற்குத் தகுந்த சூழ்நிலையும் தகுதியும், தூண்டுதலும் ஊக்கமும் வீட்டிலிருக்க வேண்டும் என்பதை நீ உய்த்தறியலாம்.

இந்நாட்டின் பல குடும்பங்களில் பிள்ளைகளுக்கு மூன்று நேரம் வயிறார உண்ண வேண்டும் என்ற கனவுகூட இராது என்பது உனக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் நீ வருந்தாமலிருக்க முடியுமா? உலகில் முதன்மைபெற்ற நாடு என் நாடு என்று கூறும் நீ, உன் நாட்டில் இத்தகைய வீடுகள் இருப்பதை அறிந்தால் வெட்கப்பட வேண்டாவா? ஆம். உன் நாட்டில் எல்லோருக்கும் உன் வீடு போன்ற வீடுகள், எல்லோருக்கும் உன் கனவுகள் போன்ற கனவுகள், உன் (முதலமைச்சர்) பணி போன்ற பணிகள் பெறுவதற்கான வசதிகள் ஏற்படும்படி பாடு படுவதும், அது போலவே உன் நாடு உலக அரங்கில் பெற்றிருக்கும் தலைமைப் பதவியை அதே உலகில் வாழும் பிற நாடுகளும் பெறப் பாடுபடுவதும் உன் அரசியல் கடமைகளுள் ஒன்றேயாகும்.

உலகம் இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டும். ஏனெனில் உன் நாட்டைப் போலாகாத பிற நாடுகள் இருக்கின்றன. ஆனால் உன் நாடும் இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டும். ஏனெனில் உன் வீட்டளவு வாய்ப்பில்லாத வீடுகளும், உன் கனவளவு கனவு காணாத மக்களும் அந்நாட்டில் உள்ளனர். இது மட்டுமன்று. நீ காணும் கனவு பெரிதானாலும் நீ வகிக்க இருக்கும் பதவி அதனிலும் எவ்வளவோ பெரிது. ஏனெனில் உன்னைப்போல் கனவு காண்பவர் பலர் உண்டு. கனவு கண்டு நீ வெற்றிபெற அவர்களைவிட உனக்குத் தகுதி மிகுதி வேண்டும். பெற்ற பின்பும் அதன் தகுதி உனக்கு இன்னும் தொலைவானதே. உனக்கு முன்னிருந்த முதலமைச்சர் புகழ் எல்லைக்கோடு உன் புகழ்க் கனவின் இலக்காகவே இருக்கும். இவற்றையும் கடந்துவிட்டால் உன் புகழ் புகழ் வருங்கால

முதலமைச்சர் புகழின் இலக்காயிருக்கும்.

இறுதியாக ஆற்றலின் முடிந்த முடிபு பணி என்பதையும், அறிவின் முடிந்த முடிபு அடக்கம் என்பதையும், அவாவின் முடிந்த முடிபு பிறருக்கும் பயன்படுவது என்பதையும் நீ என்றும் மறந்துவிடக் கூடாது. முதலமைச்சராயிருக்க வேண்டும் என்ற கனவு உயரிய கனவுதான்; அப்பதவியும் மிக உயர்ந்த பதவிதான்.