உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

231

ஆனால் அதன் வெற்றி உன் வெற்றியை மட்டும் பொறுத்ததல்ல. நாட்டு மக்கள் அனைவர் வெற்றியையும் பொறுத்தது. அவர்கள் வெற்றிபெற அவர்களுக்கும் நீ மிக உயர்ந்த கனவுகள் காணும் பண்பாட்டை அடைய வேண்டும். அக்கனவுகள், நிறைவேறும்படி செய்யும் தகுதிகளையும், திறங்களையும், அதற்கான சூழ்நிலைகளையும் நீ அமைக்க வேண்டும். அதற்காக நீ எல்லாருடைய ஒத்துழைப்பையும், ஒத்த வளர்ச்சியையும் பெற்றாக வேண்டும். பிறருடன் சரிநிகராக நடந்து, சரிநிகராக நினைந்து, யாவரையும் சரிநிகராக்க முனைந்தாலன்றி, நீ இதனைச் செய்ய முடியாது. எல்லாருடைய திறமைகளையும் பெரியார் சிறியார், ஆண் பெண், அறிஞர் உழைப்பாளிகள் முதலிய யாவரின் திறமைகளையும் நீ ஊக்க வேண்டும். இது நல்ல பணி கோரும் பணியேயன்றோ?

மேலும், உன் கனவும் பணியும் எத்துணை உயர்வானாலும் உலகில், உன் நாட்டு மக்களிடையேகூட, இதனினும் உயர்ந்த கனவு காண்பவர், தகுதியுடையவர், உயர்பதவிக்கு உரியவர் உண்டு என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது. அறிவைவிட அறிவூட்டும் பண்பு பெரிதன்றோ? செல்வத்தை விடச் செல்வத்தைப் பெருக்கு மாற்றல் பெரிதன்றோ? அதைப்போலவே முதலமைச்சராவதைவிட முதலமைச்சரை ஆக்க உதவும் உன் ஆசிரியர், உன் கல்வித் துறையில் உனக்காக நூல்கள், கவிதைகள், அறிவுநூல்கள் இயற்றிய அறிஞர்கள் இன்னும் உயரியவரன்றோ? அந்நூல்களுக் காதாரமான புத்தாராய்ச்சியிலும், கண்டுபிடிப்புக் களிலும், கற்பனைத் திறன்களிலும், அறிவு வளர்ச்சியிலும் முனைபவர் பணி எத்துணைச் சீரியது! உன்பணியின் உயர் மதிப்புக்குக் காரணம் அவர்கள் உன் மரபை ஆக்குவதுபோல், நீ அவர்கள் மரபையும் பெருக்க உதவுபவன் என்பதே.

முதலமைச்சராக, அறிஞராக, கவிஞராக எவரும் பிறப்ப தில்லை. கவிஞன் பிறக்கிறான், ஆக்கப்படுவதில்லை என்ற பழமொழியை நீ கேட்டிருக்கலாம். இது ஒரு முழு உண்மையல்ல. அதன் பொருள் கவிஞனும் தக்க குடும்ப, சமூக நாட்டுச் சூழ்நிலை களில் அருமையாகப் பிறக்கிறான் என்பதே. அச்சூழ்நிலைகளை நாம் உடனடியாக ஆக்க முடியாதது போல. ஆனால் சில தலைமுறைகளில் விரும்பிய செடியைக் காய்க்கவைக்க

முடியும்;