உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

(255 ஊக்கத்தைச் சிதறடிப்பான். குறிக்கோளும் திட்டமும் உடையவன் ஒருமுகப்பட்டுத் தன் ஆற்றல்களனைத்தையும் தான் எடுத்துக் கொண்ட பணியில் செலுத்துவான்' செயற்கரிய செய்யும் திறம் இதனாலேயே பெறப்படுகிறது. கடுமைகளையும் தடங்கல்களையும் இத் தகையவன் கண்டு தயக்கமடையான், அதற்கான உறுதியையும் இக்குறிக்கோள் நோக்கும், ஒருமுக முயற்சியுமே அவனுக்குத் தருகிறது, ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து முயல்பவனுக்கு, அவ்வழியில் செல்வத்தைத் தடுக்கும் தடங்கலெதுவும் கிடையாது, செய்து முடிக்க முடியாத செயல் என எதுவும் இருக்க முடியாது.

என

நீராவி இயந்திரம், தந்தி, வானொலி, வானூர்தி இவற்றுள் யாவுமே பழங்கால உலகம் கைகூடாதவை எண்ணியவைதான். ஆனால் இவை யாவும் இன்று கண்கூடாகக் கைகூடியவையே. அவை கைகூடுபவை எனக் கண்டவர்கள் கனவு கண்டவர்களே, அவற்றை வெறுங் கனவுகள் என ஏளனம் செய்தவர் உண்டு. அவர்களைக் கானல் நீர்வேட்டையாடுபவர் என நகையாடியவர் உண்டு. ஆனால் அவர்கள் குறிக்கோள், மன உறுதி, தன்மறுப்பு, உழைப்பு ஆகியவற்றாலேயே இவை நனவுலகப் பொதுநலச் செய்திகளாகியுள்ளன. உலகின் சிறந்த எழுத்தாளருள் ஒருவரான ஸர் வால்ட்டர் ஸ்காட்கூட கரிவளி (Coaglas) மூலம் நகர்களுக்கு விளக்கி எண்ணுதல் பித்துக் கொள்ளித்தனம் என்று எண்ணினாராம்! ஆனால் உலகில் மிகப் பொதுப்படையான மனிதன்கூட இன்று அவ்வறிஞர் கூற்றைத் தான் ஏளனம் செய்வான்! அறிஞர் நண்பர் ஆகிய எத்தனை பேர்களின் ஏளனம், வெறுப்பு, அன்பு கலந்த கண்டனம் ஆகியவற்றை எதிர்த்து மக்கள் துன்பம் நீக்கும் பணியில் லிஸ்டர் ஈடுபட்டுச் சலியா உழைப்பால் வெற்றி கண்டார்? இத்தகைய பேறு உனக்குக் கிட்டினாலும் சரி, கிட்டாவிடினும் சரி! கிட்டக்கூடு மாதலால், உன் குறிக்கோளில் நீ உறுதியாய் நிற்கக் கடவாய்; தடங்கல், கடுமை வெற்றி தோல்வி, புகழ் இகழ், ஆதரவு வெறுப்பு எவையும் உன் முயற்சியில் உன் நம்பிக்கை உறுதியைக் குலைக்காதிருக்குமாக.

உன் கல்விப் பயிற்சியும், அதற்கு உன்னைத் தகுதிப் படுத்திய உன் வீட்டுப் பயிற்சியும் உனக்கு ஒப்பற்ற ஒரு மூலதனம்