உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




256) |

அப்பாத்துரையம் - 46

என்பதை நீ மறக்கக் கூடாது. ஆனால் மூலதனம் உடையவர்கள் எல்லாரும் தொழில் முதலாளிகளாய் விட முடியாது. தொழில் முதலாளிகளின் வெற்றியும் முற்றிலும் மூலதனத்தின் அளவில் நிற்பதல்ல. இம் மூலதனத்தை நீ எவ்வாறு பயன்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்தே அது நிறைவுபெறும். முதலமைச்ச ராகவும் அமைச்சராகவும் கவிஞராகவும் வருவோர் பலருக்கு உன் கல்விப் பயிற்சியோ, உன் வீட்டுப் பயிற்சியோ இல்லாமலிருந்து வந்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இம் மூலதனங்களில்லாமலே, அவர்கள் தொழிலாற்றி வெற்றி பெற்றுக் காட்டியுள்ளனர். அவர்களுக்கிராத மூலதனத்தகுதி உனக்கு இருக்கிறது. அவர்கள் திறமும் உனக்கு இருந்துவிட்டால், உன் வெற்றி அவர்களின் வெற்றியையும் கடந்து செல்லக்கூடும். அது பொன்மலர் மணமும் பெற்றது போலாய்விடும்.

ம்

இலண்டன் நகர்த் தெருக்களில் நடந்து சென்று தம் தாயாருக்குப் பழைய மாற்றுடை வாங்கப்பாடுபட்ட ஒருவர், இங்கிலாந்தின் ஆடவர் பெண்டிர் யாவருக்கும் உடைகளைப் பெருக்கும் பணியை நன்கு செய்த முதலமைச்சராய் இருந்து வந்துள்ளார். வீட்டில் அடுப்பெரிக்கத் தெருவில் சுள்ளி பொறுக்கித் திரிந்த ஓர் ஏழைச் சிறுவர், பின்னாளில் இங்கிலாந்தில் செல்வர் ஏழை ஆகிய அனைவரின் பொருளியல் வாழ்வையும் ஒழுங்குபடுத்தும் பொருளமைச்சராகச் செயலாற்றி யுள்ளார். கல்வி நாடி அரும்பாடு பட்டுக் கற்ற பலர் கல்வித் திட்டமமைத்துத் தரும் கல்வியமைச்சராயிருந்துள்ளனர்.வீட்டுப் பயிற்சியாலும் ஏட்டுப் பயிற்சியாலும் அவர்களினும் மேம்பட்ட நிலையிலுள்ள உன்னிடமிருந்து உன் நாடு என்ன எதிர் பார்க்காது?

உன் நாடு ஷேக்ஸ்பியரையும், மில்ட்டனையும், வேர்ட்ஸ் வொர்த்தையும், ஷெல்லியையும், கீட்ஸையும் ஈன்ற நாடு. ஆல்ஃபிரடும் எலிஜபெத்தும் விக்டோரியாவும் ஆண்ட நாடு, நியூட்டனும் வாட்ஸும், ஹாப்ஸும் லாக்கும் ஆராய்ச்சியால் உலகின் கண்களைத் திறக்க உதவிய நாடு. இத்தகைய நாட்டின் முழு நிறை பயிற்சிபெற்ற உன்னிடமிருந்து உலகு என்ன எதிர்பார்க்காது?