வருங்காலத் தலைவர்கட்கு
257
உன் நாடு இன்று பெற்றுப் பெருகி உலகின் பல நாடுகளைத் தன் பிள்ளைகளாகக் கொண்டது.பல பிள்ளைகள் தந்தையுடன் போட்டி வாழ்வு வாழத் தொடங்கி விட்டனர். அப்போட்டியாலும் அதன் புகழ் பெருகிற்று என்பதனை உணர்வாய். உன் நாடு உலகின் நான்கிலொரு பங்கு மக்கள் மீது ஆட்சி செலுத்துகிறது, ஆனால் அவ்வாட்சி வெறும் அரசாட்சியன்று. அது அறிவாட்சியாய், கலையாட்சியாய்த் திகழ்கின்றது. உன் நாட்டின் விடுதலை யார்வம், மக்கள் பணியார்வம் அவற்றிலும் வேரூன்றிக் கிளைத்துத் தளிர்த்துள்ளன. பிரிட்டனின் பிள்ளைகளாகக் கருதத்தக்க நாடுகளுடனும், பிரிட்டனைப் போன்ற நிலையினையுடைய அதன் உடன்பிறந்த நாடுகளான பிற வெள்ளையர் நாடுகளுடனும், பிரிட்டனின் சீடப்பிள்ளைகளான இந்நாடுகள் போட்டியிடத் தயங்கவில்லை ஆனால் பிரிட்டனின் அறிவாட்சியும் நாகரிக ஆட்சியும் இவ்வெல்லையையும் கடந்து உலகில் ஒளி வீசுகிறது.
வெள்ளிப் பனிக்கடலில் பதித்த மரகத மணி போன்று விளங்கும் உன் நாட்டின் நேர்புகழையும் விஞ்சியுள்ளது அதன் தொலைபுகழ். அதன் பயனாக இன்று இந்தப் பிரிட்டனைக் கடலகத்துள் எந்தச் சக்தியாவது அமிழ்த்திவிட்டாலும் கூட, உலகில் அதன் புகழ் பின்னும் குறைவுறாது. இத்தகைய நாட்டின் புகழைப் பெருக்குவது மட்டுமன்று, அதனைப் புகுத்துவது, காப்பதுகூடப் பெரும் பொறுப்பேயாகும். நம் இறந்தகாலச் சாதனையின் புகழே நம் வருங்காலப் புகழ்மீது பெரிதளவு தன் நிழலை வீசத்தக்கதாகும். ஆகவே உன் நாட்டின் மூலதனமும் உன் பொறுப்பும் அந்த அளவுக்குப் பெரிதேயாகும். ஆகவே வரிந்து கட்டிக் கொண்டு உன் மாபெரும் பணியில் இறங்கு.
உன் வாழ்க்கையின் மதிப்பு உன் தன்மதிப்பையே பொறுத்தது. நீ மேற்கொள்ளும் தொழில், உலகுக்கு உயர் தொழிலாகத் தோற்றலாம். சிறு தொழிலாகத் தோற்றலாம். ஆனால் உனக்கு அது என்றும் உயர்வுடையதாகவே இருக்க வேண்டும். உன் தகுதியைப் பிறர் உயர்வாகக் கொள்ளலாம். மட்டமாகக் கொள்ளலாம். ஆனால் நீ உன் தகுதியை உயர் வுடையதாகக் கருதுவதுடன் அவ்வுயர்வைப் பேண வேண்டும். உன் தொழிலை, உன் தகுதியைப் பற்றிப் பிறர் அவமதிப்பாகக்