258
அப்பாத்துரையம் - 46
கருதுவது பற்றி நீ கவலைப்பட வேண்டா. ஆனால் அங்ஙனம் அவர் கருத இடமேற்பட்டதென உன் மனச்சான்று என்றும் எண்ணாமல் பார்த்துக்கொள். பிறர் அவமதிப்பை உன் மனச்சான்று பிற்காலத்தில் திருத்திவிடும். உன் மனச்சான்றும் நேர்மையும் அவர்கள் மனச்சான்றையும் நேர்மையுணர்ச்சியையும் தட்டி எழுப்பிவிடும். ஆனால் உன் மனச்சான்றே உன்னைக் குறை கூறினால், உன்னைப் பற்றிப் பிறர் எண்ணம் மாறுவதரிது. உன் முயற்சியில் உனக்கு ஊக்கமும் ஏற்படாது.
தவறு என்ற எதனையும் நான் என்றும் செய்ய முடியாது' என்ற உன் உறுதியே உன் தன்மதிப்பு உறுதி. தவறு என்று தெரியாமல் நீ செய்து பின் வருந்தலாம். திருந்தலாம். ஆனால் தவறு என்று தெரிந்து அதனை நீ செய்வது ஒருபோதும் கூடாது. அதனினும் கோழைமை, மனிதப் பண்புக்கு அடுக்காதது வேறு இருக்க முடியாது. இதுபோலவேஅச்சங் காரணமாக, தன்னலங் காரணமாக, அன்பு, நட்பு, காரியக்காரமதி என்ற தகாத சாக்குப் போக்குகளினால் மறைக்கப்படும் ஒருசார்பு காரணமாக, நீ தவறு எனக் கண்டதைச் செய்யவோ, அது தவறு அன்றென வாதிட்டு உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளவோ கூடாது. அத்தகைய செயல்கள் செய்வதே கயவர் பண்பு என்பதை மனத்திலிருத்திக் கொள். அத்தகு செயல் செய்வோர் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் புகழுடையவர்கள் ஆனாலும் உள்ளத்தில் நீ அவர்களைக் கயவர் என மதித்து, அவர்களை விட்டொதுங்கி வாழ்வாயாக.
உன் சொற்கள் வேதமொழி உரைகளுக்குக் கற்பிக்கப் படும் உறுதி உடையவையாயிருக்க வேண்டும். நான் சொல்லிய சொல்தானே, நான் மாற்றிக்கொள்ள முடியாதா என்று நீயே நினைத்தால், பிறர் உன் சொல்லை நம்பி எப்படிச் செயலாற்ற முடியும்! உன் சொல்லை நீ மதிப்பதுபோல், உன்போன்ற மனிதர் சொல்லையும் நீ மதிப்பவன் என்று தெரியும் எவனும் உன்னிடம் பொறுப்பற்ற சொல் கூற மாட்டான். கூறினாலும் அச்சொல்லின் மதிப்பை அவன் கெடுத்துக் கொள்பவன் என்று தெரிந்தகணமே. மனிதப் பண்புடைய மனிதர் பட்டியலிலிருந்து நீ அவனை விலக்கிவிடுதல் வேண்டும். அத்தகையோன் எவ்வளவு பெரியவ னானாலும் உன் நண்பனாக, உன் தோழனாக, உன் பணியிலும்