வருங்காலத் தலைவர்கட்கு
259
உரிமையிலும் சரிசமப் பங்காளனாகத் தகுதியற்றவன் என்று நீ காட்டிவிடல் வேண்டும். இத்துணிவு உனக்கு இருந்தால், நீ நாளடைவில் உலகையே உயர்த்திவிடக் கூடும் என்பதை மனத்திற் கொள்வாயாக. நல்லார் வாழும் உலகு. நல்லுலகாய் இருந்து தீரும் என்பது இத்தகைய திட்பமுடைய நல்லாரை மட்டும் குறித்த உரை ஆகும்.
தன்மதிப்புடைய நீ, உன்னைத் தகாதவனென்றோ, இழிவுடையவன் என்றோ கருதுபவனை உன் அறிஞருலகம், உன் அனுபவ உலகம் ஆகிய இரண்டினின்றும் விலக்கியாக வேண்டும். அதுபோலவே உன்னால் மனிதப்பண்புடைய மனிதனாகக் கொள்ளும் எவர் தன்மதிப்பையும் நீ ஊறுசெய்யக் கூடாது. உன்னை அவமதிப்பவரை ஒதுக்கி விடுவது போல் அவரை ஊறு செய்பவரையும் நீ ஒதுக்கிவிடுதல் வேண்டும். நல்லார் பலர் இவ் வுறுதியில் குன்றுவதனாலேயே உலகில் இன்று இன வேறுபாடு வகுப்பு வேறுபாடு, சமய வேறுபாடு, நாட்டு வேறுபாடு ஆகிய ஒரு சார்பு அநீதிகளும் கொடுமைகளும் நீடிக்கின்றன.பிறமனிதர் பலர் பெறாத பள்ளிப்பயிற்சியும் கல்லூரிப் பயிற்சியும் பெற்ற உன்போன்ற இளைஞரின் பெரும் பொறுப்பு உலகில் தகுதி, திறம் ஆகிய இரண்டையன்றி வேறில்லா.
இதுவே பல தோல்விகளிடையிலும் இறுதியாக நிறைவெற்றி தரவல்லது. இந்நெறி சென்றவர் தயங்கியதில்லை. தயங்க நேர்ந்தது மில்லை. ஏனெனில் அதன் ஒவ்வொரு தோல்வியும் ஒரு வெற்றியேயாகும். உன் நடுநிலையின் மூலம் உலகில் ஒற்றுமையும் சமத்துவமும் அவ்வடிப்படையிலேயே ஒரே குறிக்கோள் அடிப்படையில் அன்புப் போட்டியும் நிகழுமாக. உன் வெற்றியும் உன் நாட்டு வெற்றியும் இவ்வன்புப் போட்டிக்கே வழிகாட்டுமாக. உறுப்புக்கு ஊ றின்றி ஆதாயமும் தரும் உடலொற்றுமை; எதிரிக்கு நட்டமின்றி ஆதாயம் தரும் கூட்டாதாய முறை ஆகியவற்றைக் கண்டு உன் அன்பு வெற்றியால் உலகில் அன்பாட்சிக்கு வழி வகுப்பாயாக.
வாழ்க உன் வருங்கால நாட்டுப்பணி!