நேதாஜியின் வீர உரைகள் ——————————————— |
|| 111 |
மக்களைக் கொண்ட ஜான்ஸியின் சுதந்திரத்தைக் காப்பாற்ற ஒரு இலட்சுமிபாயை இந்தியா அளிக்குமானால், 38 கோடி மக்களின் சுதந்திரத்தைப் பெறுவதற்கு ஆயிரக்கணக் கான ஜான்ஸி ராணிகளை ஏன் இந்தியா அளிக்காது? ஆம்; நிச்சயம் அளிக்கத்தான் செய்யும்.
அந்த ஜான்ஸி ராணியின் பிறந்த தினமாகிய இச் சுபதினத்தில், இந்த ஜான்ஸி ராணிப் படையின் பயிற்சி முகாமைத் திறந்து வைப்பதில் பேரானந்தமடைகின்றேன். இம் முகாமில் 156 சகோதரிகள் பயிற்சியைத் தொடங்குவார்கள். இத்தொகை விரைவில் ஆயிரமாகப் பெருகுமென்று நம்புகிறேன். தாய்லாந்து, பர்மா முதலிய இடங்களில் பெண்களுக்குப் பயிற்சி முகாம்கள் இருக்கின்றன. ஆயினும் இதுதான் தலைமை நிலையம். ஆதலால் இங்கு பலம் வாய்ந்த ஆயிரம் ஜான்ஸி ராணிகள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். “டில்லிக்குச் செல்லுவோம்” என்ற கோஷத்தை உங்களிட மிருந்து கேட்டு
ஆனந்தமடைகிறேன். நான் இப்பொழுது விடுத்த செய்தியை நீங்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச்சென்று, எனது திட்டத்தை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஜேய் ஹிந்த்!