உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 117

சதவிகித மட்டுமே சிந்திவிட்டு, மீதியை சேமித்து வைத்துக் கொள்வது எப்படி?

அதிர்ஷ்டவசமாக நமக்கு ஆள் பஞ்சமில்லை. நீண்டதோர் பெரும் யுத்தத்தைக்கூட சமாளிக்க ஆள் பலம் நமக்கு இருக்கிறது. நமது தேவையெல்லாம் பணமும் சாதனங்களுமே. நாமெல்லோரும் மிக ஏழைகளாக இருந்தால் வெளிநாட்டாரின் உதவியை நாடுவது குற்றமல்ல. நம்மிடந்தான் பணக்காரர்கள் ருக்கிறார்களே! இவர்களை வைத்துக் கொண்டு அயலாரிடம் உதவிக்குக் கையேந்தினால், அதைவிடக் கேவலமும் வெட்கமும் என்ன இருக்கிறது. உயிரையே தியாகம் செய்ய நம் சகோதர சகோதரிகள் முன் வந்திருக்கும்போது, உயிரை வெல்லமாக நினைக்கும் பணக்காரர்கள் தங்களிடமுள்ளவைகளை விட்டுப் பிரிய ஏன் முணுமுணுக்க வேண்டும்? உயிரோடு பணத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், பணத்துக்கு மதிப்பேது? பணம் இன்று வரும், நாளை போகும்; இழந்த உயிர் திரும்ப வருமா? கனவு கூடக் காண முடியாதே! வெளிநாட்டு சர்க்கார் உங்களைப் பார்த்து,“உன் சொத்தைக் கொடு, அல்லது உன் உயிரைக் கொடு" என்று உத்ரவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நிச்சயமாக, உயிரைக் கொடுக்காமல் உங்கள் சொத்தைத் தானே கொடுப்பீர்கள்!

இன்று, இளைஞர்கள் தங்கள் உயிர்களையே தியாகம் செய்ய முன்வந்துள்ளனர். ஏழைகள், போர்களத்தில் தங்களைப் பலியிடும் பொருட்டு, அவர்களுடைய உடைமை யெல்லாவற்றையும் ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் அர்ப்பணம் செய்து விட்டனர்; உயிரையும் சுதந்திரப் போருக்குப் பணயம் வைத்து விட்டார்கள். இந்தப் பாமர மக்களின் கண்களிலே, என்றுமில்லாத ஓர் ஒளி வீசுகின்றது. அவர்களது ஆவேச உணர்ச்சிலே உத்சாகம் பொங்குகிறது. இப்படிக் கணக்கற்ற மக்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். இவர்களது உதாரணத் திலிருந்து 'சர்வாம்சப் படை திரட்டல்' என்றால் என்ன வென்பதை உலகமே தெரிந்து கொண்டு விட்டது. இதே உணர்ச்சியுடன், மலேயாவிலுள்ள இந்தியப் பணக்காரர்களில்