உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118 ||

அப்பாத்துரையம் - 6



ஒருவர்கூட 'இந்தியச் சுதந்திரத்துக்காக இதோ எனது சேமிப்புச் சொத்து' என்னறு அர்ப்பணம் செய்ய முன் வருவாரில்லையா?

சுயநலத் தியாக லட்சியத்தில் இந்தியர்களுக்குப் பரிபூரண நம்பிக்கையுண்டு. இந்தியாவிலுள்ள ஹிந்து சன்னியாசிகளும் முஸ்லிம் பக்கிரிகளும்தான் அதற்கு உதாரணம். உண்மை, நிதி, தியாக நம்பிக்கை ஆகியவைகளை நிலை நிறுத்தும் பொருட்டு, தமது அரச போகத்தையும் உடைமைகளையும் துறந்து, எத்தனை மன்னர்கள் சன்யாசிகளாகவும் பக்ரிகளாகவும் மாறியிருக்கின்றன ரென்பதைச் சரித்திரம் நமக்குக் கற்பிக்கின்றது. அவ்வளவு பெருமை படைத்த நாட்டில் பிறந்த நமக்கு, நமது 38 கோடி மக்களை விடுதலை செய்யும் கடமையைவிடப் புனிதமும் நீதியுமுள்ள பணி வேறென்ன இருக்கிறது? நீங்கள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இல்லையென்றால், "உயிர் நீங்கலாகவுள்ள எங்கள் சொத்து முழுமையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று ஏன் சொல்லக்கூடாது?

நம் சர்க்காரின் வேலைத் திட்டங்களை இப்போது தெரிவித்து விடுகிறேன்; அவைகளை நிதானமாகவும் ஒழுங்காகவும் நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்.யுத்தத்துக்கு முன் மலேயாவிலிருந்த இந்தியர்களின் சொத்து சுமார் 100 கோடி ரூபாய். யுத்தகாலத்தில் அம் மதிப்பு பன்மடங்கு பெருகி வளர்ந்துள்ள தென்பது உங்களுக்கே தெரியும். பிற சர்க்கார்களைப் போலவேதான், நமக்கும் ஒரு வருடத் தேவைக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க உத்தேசித்துள்ளேன். அதனை நிறைவேற்றும் பொருட்டு உங்கள் சொத்துக்களைத் தியாகம் செய்ய நீங்களாகவே முன் வரவேண்டும்; அல்லது யுத்தம் முடியும்வரை நாங்கள் விடும் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்து கொண்டேயிருக்க வேண்டும். இவ்விரண்டில் எதைச் செய்வதென்பது உங்கள் முடிவைப் பொறுத்தது. முதன்முதலில் இது சமயம் உங்களிடமிருந்து விரும்புவது பத்துக் கோடி ரூபாய்தான். இத்தொகை உங்கள் பழைய சொத்தில் பத்திலொரு பகுதிதான். மலேயா இந்தியப் பணக்காரர்களில் பெரும் பணக்காரர்கள் பலர் இங்கு