உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 123

கடுமையானதும் நிண்டதுமான போர் நம்மை எதிர்நோக்கியிருக்கிறது. ஆதலால், இந்தியா நீடூழி வாழ, உயிர்த்தியாகம் செய்ய வேண்டுமென்ற ஆவல்தான் வேண்டும். ‘சுதந்திரப் பாதை நமது இரத்தத்தால் நிரம்ப வேண்டும்; அதன் மூலம் வீர மரணம் நமக்கு வேண்டும்' என்ற ஆசை நம்மிடம் குடி கொள்ள வேண்டும். நண்பர்களே! உங்களிடம் ஒன்று கேட்கின்றேன். உங்கள் இரத்தத்தைக் கொடுங்கள்; இரத்தத்துக்கு இரத்தத்தாலேயே பழி தீர்க்க முடியும். இரத்தம்தான் சுதந்திரத்தின் விலை. என்னிடம் இரத்தம் கொடுங்கள்; உங்களுக்குச் சுதந்திரம் கொண்டு வருகிறேன். இது சத்தியம்.