உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 133

நிலைமையை நேரில் பார்த்தேன். பின்னர் சுதந்திரம் பெற்ற பர்மாவுக்குச் சென்றேன்; நீண்ட நாளாக அதன் நிலைமையும் என் கண்களால் கண்டு மகிழ்ந்துள்ளேன். சீனாமீது ஜப்பான் கொண்டுள்ள மனோபாவம் உண்மையனதா? போலியா? என்பதை யறிய, சீனாவுக்கும் சென்றேன். ஜப்பான் - தேசீயச் சீனா ஒப்பந்தம், தேசீய சீனாவின் தேவைகளைப் பூர்த்திசெய்து கொண்டிருக்கிறது. யுத்தம் முடிந்ததும் ஜப்பானியர் தனது படைகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவ் வொப்பந்தத்தில் உறுதி செய்திருக்கின்றனர்.

பிறகு ஏன் சுங்கிங் சீனா சண்டை செய்கிறது? சுங்கிங்குக்கு, பிரிட்டனும் அமெரிக்காவும் மனப்பூர்வமாகவே உதவியளிக்கின்றன வென்று நம்பமுடியுமா? பதிலுக்கு சுங்கிங் சீனாவிட மிருந்து எதையும் திரும்ப வாங்காமல் விட்டுவிடுமா? ஜப்பான் மீதுள்ள பழைய பகைமையையும் வஞ்சகத்தையும் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் சுங்கிங் அடமானம் செய்யப்பட்டு விட்டதென உறுதி சொல்லுகிறேன். ஜப்பானுக்கு சீனா மீது இன்றைய மனோபாவம் இல்லாதிருந்தால், ஜப்பானை எதிர்த்து யுத்தம் செய்ய பிரிட்டனிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் உதவி பெறுவதில் அர்த்தமுண்டு; நியாயமுண்டு. ஆனால், இப்பொழுது சீன ஜப்பான் உறவில் புத்தம் புதிய அத்தியாயம் ஆரம்பமாகிவிட்டது. இந்நேரத்தில் யுத்தத்தை அர்த்தமில்லாமல் அது நீடித்துக்கொண்டேயிருக்குமானால், கொஞ்சங்கூட மன்னிப்பளிக்க இடமில்லை. சுங்கிங்கின் நடத்தை சீன மக்களுக்கு நன்மையானதல்ல; ஆசியாவுக்குக்கூட நன்மையல்ல.1942 ஏப்ரல் மாதத்தில், தங்களுக்குச் சுதந்திரமாக நிறைய அவகாசம் கிடைத்தால் சீன ஜப்பான் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் ஈடுபடுவதாகக் கூறினீர்கள். அந்த அறிக்கை, அரசியல் மேதையின் அபூர்வமான தலைசிறந்த வார்த்தை கொண்டதாகும்.

சீனாவின் குழப்பத்துக்கு, இந்தியாவின் அடிமைத்தனமே தான் பொறுப்புள்ள அஸ்திவாரம். இந்தியாமீது பிரிட்டனின் பிடிப்பு இருப்பதாகலேயே ஆங்கிலேய அமெரிக்கர்கள், சுங்கிங் -ஜப்பான் போரை நீடித்து நடத்தும் பொருட்டு சுங்கிங்கிக்குப் போதிய உதவியளிப்பதாகக் கூறி, சுங்கிங்கை நம்பும்படி செய்து