உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
132 ||

அப்பாத்துரையம் - 6



புனிதம் பெறும்" என்ற என் கருத்து நிறைவேறியதைக் கண்ணுற்ற பிறகு தான், ஜப்பானுக்குச் செல்வதெனத் தீர்மானித்தேன். என் தேசத்தார் பலரையும் போலவே, நானும் பல ஆண்டுகளாக, ஜப்பானியருக்கு எதிரான பிரச்சாரங்களைப் படித்திருக்கிறேன். 1937-இல் சீனாவோடு ஜப்பான் போர் தொடுத்த காரணம் அவர்களைப் போலவே எனக்கும் விளங்காமலே தான் இருந்தது. 1937-38இல் என் தேசத்தாரைப் போலவேதான் என் அனுதாபமும் சுங்கிங் மீது இருந்தது.

1938 டிசம்பரில், நமது காங்கிரஸ் மகாசபையின் சார்பில் சுங்கிங்குக்கு அனுப்பப்பட்ட மருத்துவக் கோஷ்டிக்கு, நானே பொறுப்பாளியாக இருந்தேனென்பதை தாங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். நான் ஜப்பானுக்கு வந்த பின்னர், பழைய சந்தேகத்தில் தெளிவு கண்டேன்; ஆனால் என் தேசத்தார் இன்னும் சந்தேகம் கொண்டிருக்கின்றனர். இந்தக் கிழக்காசிய யுத்தம், ஜப்பானியர்கள், பொதுவாக உலகத்தின் மீதும் சிறப்பாக ஆசிய நாடுகளின் மீதும் கொண்டிருந்த மனப்பான்மையை புரட்சிகரமாக்கி விட்டது. இந்த மாற்றம் ஜப்பானிய சர்க்காரிடம் மட்டுமல்ல, ஜப்பானிய மக்களிடமும் காட்சி தருகிறது; ஆசிய மக்களிடமும் புதிய உணர்ச்சியைத் தோற்றுவித்து விட்டது. அதலால், ஆசிய நாடுகளெல்லாம் ஜப்பானின் பரிசுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் இழுக்கப்பட்டு விட்டன. பிலிப்பைன், பர்மா, இந்தியா, புதிய சீனா, இவைகளின் மீது ஜப்பான் இன்று காட்டிவரும் மனோபாவமே அம்மாற்றத்தைத் தெளிவு படுத்தும்.

நான் ஜப்பானுக்கு வந்த பின்னர், இன்றைய ஜப்பான் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதும், ஆசியா பற்றி ஜப்பான் கொண்டுள்ள நடைமுறைக் கொள்கை போலியானதல்ல வென்பதைக் காண, பூரணத் திருப்தியடைந்தேன். புதியதோர் உணர்ச்சியில் ஒரு தேசம் முழுமையுமே ஒன்றுபட்டு நிற்பது, உலகச் சரித்திரத்தில் புதுமையல்ல. பிரஞ்சுப் புரட்சியின் போது பிரான்ஸிலும், பொதுவுடைமைப் புரட்சியின்போது ருஷ்யாவிலும், அந்த நிலைைையக் கண்டிருக்கிறோம். இரண்டாவது முறையாக 1943 நவம்பரில் நான் ஜப்பானுக்கு வந்தபோது, பிலிப்பைனுக்குச் சென்றேன். அதன் தலைவர்களைச் சந்தித்தேன்; அங்குள்ள