உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 131

பிரிட்டிஷாரால் நேர்ந்த நீண்ட காலச் சிறைவாசமும், உடல் நலிவும் இதர இடர்களுமே என் உள்ளுணர்ச்சியை நெருங்க முடியவில்லை யென்றால், வேறெந்த சக்திக்குத் தான் என்னைப் பணிய வைக்க முடியும்? நான் அகில உலக இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஓர் மாணாக்கன் என்பது தங்களுக்கே நன்கு தெரியும். இந்த யுத்தம் தொடங்குமுன்பே, அகில உலகத் தலைவர்களுடன் நேரிடையான நெருங்கிய தொடர்பு எனக்கு உண்டு. இந்த வரி எனக்குப் புதிதல்ல. ஆதலால் எத்தகையக் கபட நாடக அரசியல் தந்திரிகளாலும் என்னைப் பேதையாக்கி அமுக்கி விட முடியாது.

அச்சு நாட்டு சக்திகளின் நோக்கத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வருமுன், ஆங்காங்குள்ள மக்களின் பொறுப்பு வாய்ந்த முக்கிய தலைவர்களோடு நெருங்கிப் பழகி, நேரிடையான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். ஆகவே, அகில உலக இயக்கங்கள் பற்றிய எனது தீர்ப்பில், என் தேச மக்கள் முழு நம்பிக்கை வைக்க முடியுமென்பதில் சந்தேக மில்லை. நான் இந்தியாவிலிருந்து வெளியேறியதும், வெளியிலுள்ள என் தேச மக்கள் என் தீர்ப்பைச் சோதனை யிட்டார்கள். என் தாய் நாட்டின் கௌரவத்துக்கோ, சுயமரியாதைக்கோ, தேசீய நலனுக்கோ மாறாக எதையும் எப்பொழுதும் நான் செய்யவில்லை என்ற முடிவும் ஏற்பட்டு விட்டது. என் செயல்முறை யாவும், உலகத்தின் முன்னிலையிலே இந்தியாவின் கௌரவத்தை நிலைநிறுத்தவும், இந்திய விடுதலையை விரைவில் கொண்டு வரவுமேயாகும்.

மகாத்மாஜி! கிழக்காசியப் போர் தொடங்கியதும், நமது பகைவர்கள் ஜப்பானியர்களுக்கு எதிராகக் கடுமையான யுத்தப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.ஆதலால், ஜப்பானியர்கள் பற்றி மட்டும் சில வார்த்தைகள் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இது சமயம் ஜப்பானிய சர்க்கார், ராணுவம், பொது மக்கள் ஆகியோருடன் நெருங்கிய கூட்டுறவோடு, நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நமது பகைவர்களுடன் இந்த ஜப்பான் உறவு கொண்டிருந்த காலமும் ஒன்றிருந்தது. அந்த உறவு உயிருடன் இருந்த நேரம் வரை நான் ஜப்பானுக்கு வரவேயில்லை. "பிரிட்டன் மீதும் அமெரிக்கா மீதும் என்றைக்கு ஜப்பான் யுத்தப் பிரகடனம் செய்கிறதோ, அன்று தான் ஜப்பானின் சரித்திரம்