130 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
மக்கள் ஒருகாலும் மயக்க மாட்டார்களென்பது நிச்சயம். ஏனெனில், என்னைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தேசீயச் சுயமரியாதையை விரும்பி வாழ்நாள் முழுதும் எல்லையற்ற துன்பங்களையனுபவித்த ஒருவன், எந்த அன்னிய சக்திக்கும் பணிய மாட்டான். தவிர, அன்னிய சக்தியின் தயவால், எனக்கென எந்தப் பலனையும் விரும்பவில்லை. என் தேச மக்களாலேயே உயர்தரக் கௌரவமும் புகழும் பெற்றுள்ள எனக்கு, அன்னிய சக்திகள் அளிக்கும் கெளரவத்தில் என்ன பெருமை இருக்க முடியும்? சுயமரியாதையும் சுயயவுணர்வும், சொந்தமாகத் தன் நிலைமையை உறுதி செய்யும் ஆற்றலும் இல்லாத ஒருவன் தான், அன்னிய பலத்தின் கைப்பாவையாவான்.
என் தேசத்தின் கௌரவத்தையும் சுயமரியாதையையும் நான் விலைக்கு விற்று விடுவேனென்று, எனது மிகக் கொடிய பகைவன்கூட சொல்லத் துணியமாட்டான். அன்றி, என் தேசத்தில் நான் ஓர் அனாதையாக யிருந்தவனென்றோ, எனக்காக ஓர் சொந்தக் கௌரவத்தை பிறர் தயவால் சம்பாதிக்க முயலுகிறவனென்றோ, எவராலும் நினைக்ககக் கூட முடியாது. இந்தியாவை விட்டு வெளியேறியபோது, என் உடைமையனைத்தையும், உயிரையும் கூட இழக்கும் ஆபத்தை ஏற்றுக் கொண்டேன். ஏன்? அந்த ஆபத்துகளைக் கடப்பதன் மூலம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு உதவ முடிவுமென்பதால்தான்.
ஆனால், அச்சு நாட்டு சக்திகளைப் பற்றியதோர் கேள்விக்கு நான் பதலளிக்க வேண்டியதுதான். அவர்களால் நான் ஏமாற்றப்படுவேனென்பது நடக்கக் கூடிய காரியமா? பிரிட்டிஷாரிடையே புத்தி சாதுரியமான அரசியல் தந்திர மிக்க நபர்கள் காணப்படுகிறார்களென்பது உலகம் ஒத்துக் கொண்ட உண்மை. அந்தப் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுடனேயே வாழ்நாள் முழுதும் இணைந்தும் எதிர்த்தும் போராடிய ஒருவன், உலகத்திலுள்ள வேறெந்த அரசியல் வாதிகளாலும் ஏமாற்றமடைய முடியாது. பிரிட்டிஷாரே அவர்களுடைய முயற்சிகளில் என்னிடம் தோல்வியுற்றிருக்கும் போது, இனி உலகிலுள்ள எந்த சக்தியும் என்னைத் தீண்டவே முடியாது.