உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 129


இந்தியப் பொது ஊழியர் எவரும் பெறுவதற்குரிய உயர்தரச் சிறப்பை எனக்கு அளித்திருக்கும் என் தேச மக்களின் பேரன்புக்கு எனது வணக்கம். அசையாத அன்பும், பிரிக்க முடியாத பற்றும் மிகந்துள்ள அ. பிமானிகள் நிறைந்த ஓர் கட்சியையும் நிறுவியிருக்கிறேன். துன்பம் நிறைந்த நீண்ட பாதையில், என் உயிர், தோழர்கள், எதிர்காலம், எதையும் பொருட்படுத்தாமல் இறங்கிவிட்டேன். வெளியுதவியின்றி சுதந்திரம் பெற்று விடுவோமென்று சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டவனாக இருந்திருந்தால், இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவைவிட்டு வெளியேறியிருக்க மாட்டேன். அடுத்த ஒரு பொன்னான சந்தர்ப்பம் கிடைக்காதென்றும், வெளியிலிருந்து நடவடிக்கை எடுக்காமல் உள்நாட்டிலிருந்து கொண்டே நம் சொந்த முயற்சியின் மூலம் வெற்றிபெற முடியாதென்றும் சந்தேகமறத்தெளிந்தேன். அதனால் தான் இப்படி தைரியமாக இறங்க முடிவு செய்தேன்.

இயற்கையின் கருணை கிடைத்தது. எத்தனையோ கஷ்டங்கள் நேர்ந்தும், இதுவரை எனது திட்டங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டது. இந்தியாவுக்கு வெளியே, நான் சந்தித்த இந்தியர்கள் அனைவரின் ஒன்றுபட்ட அபிப்பிராயத்தைத் திரட்ட முயன்றேன். இந்தியச் சுதந்திரத்துக்காக தங்களால் இயன்ற எதையும் தியாகம் செய்ய ஒவ்வொருவரும் முன் வந்துள்ளன ரென்பதைத் தங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். பின்னர், இந்த யுத்தத்தில் பிரிட்டனுக்கு எதிராகப் போரிடும் சர்க்கார்களின் அபிப்பிராயங்களை அறிய முனைந்தேன். பல ஆண்டுகளாக பிரிட்டிஷார் நமக்குச் செய்து வந்துள்ள பிரச்சாரமெல்லாம் வெறும் சூழ்ச்சியே யென்ற உண்மை புலனாயிற்று. அச்சு நாட்டினர் இந்தியச் சுதந்திரத்தின் நண்பர்களாக இருக்கின்றனர். அது மட்டுமல்ல, அச்சு நாட்டினர், அவர்கள் சொந்த பலத்திலிருந்து நமக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அள்ளிக் கொடுக்கவும் சித்தமாக யிருக்கின்றன ரென்பதைக் கண்டு கொண்டேன்.

நம் எதிரிகள் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றன ரென்பதை அறிவேன். அந்தப் பிரச்சார சூழ்ச்சியில் என் தேச