128 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
உண்மைதானா? என்று என்னையே நான் கேட்டேன். அதற்குச் சரியான பதிலைக் காணும் நோக்கத்துடனேதான் இந்தியாவை விட்டு வெளியேறினேன்.
வீட்டையும் நாட்டையும் விட்டுப் பிரிவதென்று நான் முடிவு செய்ததற்குமுன், தொலை தூரத்திலிருந்து உதவியை நாடுவது நேர்மையா? என்பதையும் சிந்தித்தேன். இதர தேசங்கள் சுதந்திரம் பெற என்னென்ன முறைகளைக் கையாண்டன என்பது பற்றிய பல புரட்சி சரித்திரங்களை ஏற்கெனவே கற்றிருக்கிறேன். எந்த அடிமை நாட்டாரும், பிறநாட்டாரின் உதவியின்றிச் சுதந்திரம் பெற்றதாக ஒருவரிகூட அவைகளிடம் காணப்படவில்லை. 1940-களில் மீண்டும் அந்த ஏடுகளைப் புரட்டினேன். ஏதேனும் ஒரு வகையில் பிறநாட்டின் உதவி பெற்றுத்தான் எந்த நாடும் சுதந்திரம் அடைந்திருப்பதைக் கண்டேன். ஒருதனி மனிதன், தன் சொந்தப் பொறுப்பில் பிறநாட்டின் உதவியைக் கடனாகப் பெறுவதும், பின்னால் அந்தக் கடனைத் திரும்பக் கொடுப்பதும் நேர்மைதானென்ற முடிவுக்கும் வந்தேன். தவிர, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போன்ற சக்தி மிகுந்த வல்லரசுகளே உலகைச் சுற்றி உதவிப் பிச்சையெடுக்கும் போது, நம்மைப்போல் அடிமைப்பட்டு ஆயுத பலமில்லாமல் தவிப்பவர்கள் வெளிநாட்டாரிடம் கடனாக உதவி கேட்பதில் என்ன தப்பு இருக்க முடியும்?
மகாத்மாஜி! இந்தக் கடுமையான வேலையைத் தொடங்குமுன், மிக எச்சரிக்கையுடன் நாள் - வாரம் மாதக்கணக்கான, பிரச்சனையை அலசி அலசி ஆராய்ந்தேன்.என் தேச மக்களுக்கு என் சக்திகொண்ட மட்டும் இவ்வளவு காலம் ஊழியம் புரிந்த நான், தேசத்துரோகியாகவோ, தேசத்துரோகி என்று எவரும் என்னைக் கருத இடம் கொடுக்கவோ, நான் விரும்பவில்லை.
இந்தியாவிலேயே தங்கி, என்றும்போல் என் ஊழியத்தைச் செய்தால், எனக்கு மிகச் சுலபமாகவே தானிருக்கும். போர் முரசு செவிடுபட்டதும், இந்தியச் சிறையிலே அடைபட்டி ருப்பதும் சுலபம்தான். அப்படிச் செய்திருந்தால், என்னைப் பொறுத்தவரையில் எதையும் இழந்தவனாக மாட்டேன்.