உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 127


இந்த நிலைமையில் இந்தியா, தங்களது வாழ்நாள் முழுதும் கையாளப்பட்டுள்ள இரத்தம் சிந்தாத வழிகளின் மூலம் விடுதலை பெற்று விட்டால், அதைவிடப் பெரும் பேறு வேறெதுவுமேயில்லையென இந்தியர்களனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியடைவர்; சந்தேகமேயில்லை. ஆனால் நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் காணாம். அன்றிருந்தது போல்தான் இன்றும் இருக்கிறது. ஆகவே, “நாம் உண்மையில் விடுதலை பெற விருப்பமுள்ளவர்களாக யிருந்தால், இரத்தப் பிரவாகத் தில் தோய்ந்துவிட நம்மைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும்” என்ற எண்ணம் உண்டாகிறது.

இந்தியாவுக்குள்ளேயே ஆயுதம் தாங்கிய போரை நடத்த வசதிகளும் சந்தர்ப்பமும் வாய்த்திருந்தால், அதுவே சிறந்த மார்க்கமென உள்ளப்பூரிப்படையலாம். ஆனால் மகாத்மாஜி! இந்தியர்களின் நிலைமை, மற்றெல்லோரையும் விட, உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். என்னைப் பொறுத்த வரையில், இருபது வருடமாக இந்தியப் பொது வாழ்வில் ஈடுபட்டதன் பயனாகக் கிடைத்துள்ள அனுபவம் என்னை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது.இந்தியாவுக்கு வெளியே தொலை தூரத்திலுள்ள இந்தியர்களின் உதவியும் சக்தி மிகுந்த அன்னிய நாட்டாரின் உதவியும் கிடைக்காவிட்டால், உள்நாட்டில் ஆயுத பலங்கொண்ட எதிர்ப்பை நடத்த முடியாது.

இந்த யுத்தம் தொடங்கியபின், வெளி நாடுகளிலிருந்து ஆயுத உதவியை எதிர்பார்ப்பதும் தொலைதூரத்திலுள்ள இந்தியர்களின் உதவியை நாடுவதும், இந்தியாவிலுள்ளவர்களுக்கு இயலாத காரியமாகி விட்டன. ஆனால் இந்த யுத்தம், பிரிட்டிஷ் வல்லரசின் எதிரிகளிடமிருந்து போதுமான அளவு எல்லாவித உதவிகளையும், இந்தியாவுக்கு வெளியேயிருக்கும் இந்தியர்கள் பெற்றுக்கொள்ள வழியைத் திறந்து விட்டது. அந்த உதவிகளை நான் எதிர்பார்த்ததற்கு முன், இந்திய விடுதலைப் பிரச்னையில் அவர்கள் கொண்டுள்ள அபிப் பிராயங்களை முதன்முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய தாயிற்று. "அச்சு நாட்டார் சுதந்திரத்தின் விரோதிகள்; ஆகவே இந்திய விடுதலைக்கும் விரோதிகள்" என்று பிரிட்டிஷ் பிரசாரகர்கள் பல ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றனரே, அது