126 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
என் அனுபவம் என்னனைக் கொண்டு வந்து விட்டு விட்டது. இந்த யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக, பலங்கொண்ட மட்டும் தங்கள் முழு சக்தியையும் உபயோகித்து, இந்தியாவைப் பாலைவனமாக்கிவிட வேண்டுமென்று பிரிட்டன் உறுதி செய்து விட்டது. இந்த யுத்தத்தில் ஒருகால் நேசநாடுகள் வெற்றிபெறுமானால், அந்த வெற்றி ஐக்கிய அமெரிக்காவைச் சார்ந்ததாகவேயிருக்கும். பிரிட்டனுக்கு அதில் எவ்வித உரிமையும் இருக்காது. தன் ஏகாதிபத்தியப் பிரதேசங்களில் ஒரு பகுதியை நேச நாட்டினரிடம் ஒப்படைத்தும் மற்றொரு பகுதியை எதிரிகளிடம் இழந்தும் பரிதபித்துக் கொண்டிருக்கும் பிரிட்டன், வெற்றியிலும் உரிமை கிடைக்காவிட்டால் எந்த நிலைமையி லிருக்கும்? கண்டிப்பபாக, இது வரையிலும் கையாளாத மிருகத்தனத்தை யெல்லாம் மிகக் கடுமையாகக் கையாண்டு, இந்தியாவைக் கொள்ளையடிப்பதன் மூலம் இழந்த நஷ்டங்களை ஈடு செய்யத் தயங்காது. அதற்காக, இப்பொழுதே லண்டனில் திட்டங்கள் தயாராகிவிட்டன. இவ்வ விபரங்களெல்லாம், இரகசிய ஆட்கள் மூலம் கிடைத்த நம்பகமான தகவல்கள். ஆதலால், அவைகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியது எனது கடமை.
பிரிட்டிஷ் சர்க்காரென்றும் பிரிட்டிஷ் மக்களென்றும் பிரித்துக் காட்டுவது இயலாத காரியம். இந்திய விடுதலையில் ஆர்வங்கொண்ட ஒரு சில அமெரிக்கரும் ஒரு சில பிரிட்டிஷாரும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த இலட்சிய நண்பர்கள் சிறு பகுதியினராகவே யிருப்பதால், அவர்களது தேசத்தார்களாலேயே தூற்றலுக்கும் துன்பத்துக்கும் ஆளாகின்றனர். இந்திய நடவடிக்கையைப் பொறுத்த வரையில், பிரிட்டிஷ் சர்க்காரும் பிரிட்டிஷ் மக்களும் ஒரே மாதிரிதான். அமெரிக்காவின் லட்சியமோ சொல்ல வேண்டாம்!
உலகத்தின் தலைமைப் பீடத்தைப் பற்றியே வாஷிங்டன் அதிகாரவர்க்கம் கனவு காண்கிறது. அப்படிக் கனவு காண்பது மட்டுமல்ல, அமெரிக்காவின் 49ஆவது சமஸ்தானமாகவே பிரிட்டன் விளங்குமென்று வெளிப்படையாகச் சொல்லவும் வாஷிங்டன் அதிகார வர்க்கத்தினர் துணிந்து விட்டனர்.