உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 125

இந்தியர்களிடம் எவ்வித வேற்றுமையுணர்ச்சியும் சிறிதுகூட இடம் பெறவில்லை.

1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரஸ், தங்கள் முயற்சியால் பூரண சுதந்திரத் தீர்மானத்தை நிறைவேற்றிற்று. அதுமுதல், அந்தத் தீர்மானமே காங்கிரஸ்காரர்களின் பொது லட்சியமாகிவிட்டது. இன்று வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களின் எழுச்சிக்கு, தாங்கள் சிருஷ்டித்த விழிப்புதான் காரணம். தங்களை உலகின் தலைமைப் பீடத்தில் வைத்துப் பூசிப்பதற்கும், தங்கள் ஒப்புவமையற்ற தலைமையேதான் காரணம். ஒரே லட்சியம் - ஆசை - உறுதி ஆகியன ஒருங்கே படைத்த இந்தியத் தேசாபிமானிகளாகிய நாமனைவரும், உலகப் பொதுமக்களின் முன்னிலையில் ஒரே மாதிரிதான்.

நான் 1941 - இல் இந்தியாவைவிட்டு வெளியேறியதும், பிரிட்டிஷ் செல்வாக்குச் செல்லுபடியாகாத பல தேசங்களில் சுற்றுப் பிரயாணம் செய்தேன். அங்கெல்லாம் தங்கள் தலைமை போற்றப்படுவதையும், சென்ற நூற்றாண்டுவரை வாழ்ந்த இந்திய அரசியல் மேதைகள் அனைவரையும்விட தங்களுக்கே அதிகச் சிறப்புத் தருவதையும் நேரில் கண்டேன். அரசியல் துறையிலே ஒவ்வொரு நாடும் தத்தம் லட்சியங்களை உறுதிசெய்து கொண்டுவிட்டன. ஆயினும் நவீன சக்திகளுடன் கூடிய ஓர் முதல்தர வல்லரசை, மிகத் திறமையாகவும் வீரமாகவும் எதிர்த்துப்போர்செய்து, தன் தேச மக்களுக்கு வாழ்நாள் முழுதும் சேவை செய்துவரும் தங்கள் மேதைக்கு இ ணையே கிடையாது. பிரிட்டிஷ் செல்வாக்குப் பிரதேசங் களில் காணப்படுவதைவிட, ஆயிரம் மடங்கு அதிகமாகவே பிற இடங்களில் தங்கள் மதிப்பும் தாங்கள் அடைந்துள்ள பேறுகளும் புகழப்படுகின்றன.1942-இல் தாங்கள் துணிந்து செய்த "வெள்ளையனே வெளியேறு தீர்மானம், இன்னும் நூறு மடங்கு தங்கள் புகழை வளர்த்திருக்கிறது.

இந்தியாவில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மூலம் நானும் நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். எனது வெளிநாட்டு வாழ்க்கையின் போதும், பல இரகசிய உண்மைகளைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். "இந்தியாவின் விடுதலையை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியும் ஒருகாலும் ஒப்புக் கொள்ளாது” என்ற முடிவுக்கு