உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
146 ||

அப்பாத்துரையம் - 6



முறியடிக்கப்பட்டது. முதன்முதலில் அடைந்த வெற்றி புனிதமானது, ஏனெனில் வாலிப நெப்போலியன் தலைமையில் அனுபவமில்லாத பிரஞ்சு ராணுவம் நடத்திய போர், அவர்களது சொந்த நாட்டின் நலனைப் பற்றியதாகும். பின்னால் நடத்தியதும் புனிதப் போரல்ல; அப்பொழுது ஐரோப்பாவையே ஆக்ரமிக்கும் நோக்கம் புகுந்துவிட்டது. ஆகவே சக்ரவர்த்தி நெப்போலியன் தலைமையிலிருந்த பிரஞ்சு ராணுவம், உள்ளுணர்ச்சியையும் யுத்த நோக்கத்தையும் இழக்க நேர்ந்ததன் காரணமாக, முழுத்தோல்வியை அடைந்தது.

இதே உதாரணம், ஆங்கிலேய அமெரிக்கர்களுக்கும் பொருந்தும், இவர்களுக்குப் புனிதமான நோக்கம் எதுவும் கிடையாது. உலகத்தையே ஆக்ரமித்துவிட வேண்டுமென்றும் போரிடுகிறார்கள். ஆதலால், இந்தப் போரை உள்ளுணர்ச்சி யுடன் நீண்டநாள் நீடித்து நடத்த முடியாது.

இப்பொழுதுகூட பிரிட்டனின் சக்தி மிகமிகக் கேவலமாக இருக்கின்றதென முன்பே தெரிவித்துவிட்டேன். ஆகவே, ரோப்பாவில் அமெரிக்காவின் ராணுவ பலம் காலியாகிறது வரை, நேச நாட்டினர் வீரமுடன் போரிடுவார்கள். எவ்வளவு காலத்துக்குத் தான் அப்படி நீடித்து நிற்கமுடியும்? அதிகார பூர்வமான புள்ளி விபரங்களின்படி, அமெரிக்காவுக்கு சென்ற யுத்தத்தை விட இந்த யுத்தத்தில் நஷ்டம் அதிகமாகிவிட்டது. அமெரிக்கா ஓர் பெரும் ஜனத்தொகை கொண்ட நாடுதான். ஆனால் அமெரிக்கர், போர்க்குணம் படைத்த சமூகத்தினரல்ல வென்பதை நாம் மறந்துவிடக் கூடாது. விவசாயிகளையும் தொழிலாளிகளையும் கொண்ட சமூகமே அது. ஐரோப்பிய யுத்தம் அமெரிக்காவுக்கு வெகு தூரத்தில் நடைபெறுவதால், அமெரிக்கா முழுமையும் அது அபிமானம் கொள்ளும்படி செய்யவில்லை. இந்த ஐரோப்பிய யுத்தத்துக்கு அதிக ஆதரவு தருபவர்கள் ஜனாதிபதி ரூஸ்வெல்டின் சிஷ்ய கோடிகளான யூதர்களே யாவர். பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரக் கனவு காண்கிறார்கள்.

செல்வாக்குள்ள மற்றோர் தனிக் கட்சியாரும் அங்கு இருக்கின்றனர். அவர்களுக்கு ஐரோப்பிய யுத்தத்தில் திருப்தியில்லா விட்டாலும், பசிபிக் போரில் அதிகக்கவனம் செலுத்து