உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 147

கின்றனர். அதனால் அமெரிக்காவின் இடைவிடாத முயற்சி உறுதி பெற்றிருக்கிறது. அதன் காணரமாக ஐரோப்பியப் போரை விட்டுவிட்டு பசிபிக் போரில் முழுக் கவனத்தையும் செலுத்த நேரிடலாம். அப்படி நேர்ந்தால், அமெரிக்காவின் யுத்த நஷ்டம் உச்சநிலையடைந்துவிடும். அப்பொழுது முணு முணுப்புத் தோன்றிவிடும்; சக்தியின்மையும் புகுந்து விடும். ராணுவத்துறையில் நோக்கினால், யுத்த முனைத்தொடர்புகள் மிகவும் விரிவடைந்து விடும். அதனால் ராணுவப் பிரச்னைகளும் கஷ்டங்களும் அதிகரித்து விடுவதோடு அமெரிக்கரின் தளர்ச்சியையும் அதிகப்படுத்திவிடும். அமெரிக்கா என்றைக்குத் தனது தளர்ச்சியைக் காட்டுகிறதோ அன்றே அவர்களது முடிவும் தாடங்கிவிடும். அது மட்டுமல்ல, ஆங்கிலேய அமெரிக்காவின் ஐரோப்பிய வீழ்ச்சியும் புலர்ந்துவிடும்.

சோவியத் ருஷ்யா பற்றிய கேள்வி பற்றிய கேள்வி ஒன்றுதான் இப்பொழுது பாக்கி. ஜெர்மனிக்குள்ளே புகுந்து அதன் அரசியல் கொள்கைகளை மாற்றும் திறமை ருஷ்யாவுக்கு இருக்கிறதா?நேச தேசப் பிரச்சாரர்களின் கூற்றுப்படி, பெர்லினை ருஷ்யர்களால் நெருங்கத்தான் இயலுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது ருஷ்யாவின் யுத்த உற்பத்தியையும் யுத்த நஷ்டத்தையும் நாம் கவனிக்கவேண்டும். சோவியத்துக்கு உயிர் நஷ்டமும் பொருள் நஷ்டமும் மிக அதிகமென்பதை எவரும் மறுக்க முடியாது. அவர்களது முயற்சிக்கும் ஓர் எல்லையுண்டு. எதிர்காலத்தையும் அவர்கள் அளவிடுவார்கள். மார்ஷல் ஸ்டாலினின் சிறந்த பிரச்சார சக்தி, எந்தவித நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் யுத்தத்தை நீடித்து நடத்துவதற்கான மகத்தான பலத்தையும் உணர்ச்சியையும் ருஷ்ய மக்களுக்கு அளித்திருக்கிறது. அவர்கள் தங்கள் தந்தை நாட்டுக்காகவும் தங்கள் சொந்த சொத்துச் சுகங்களுக்காகவும் மட்டுமே போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். ருஷ்யாவுக்கு வெளியே அவ்வளவு உறுதியுடன் போரிட அவர்களுக்கு மனம் வராது. ஸ்டாலின் கிரேடில் ஜெர்மனியர்களுக்கு நேர்ந்ததுதான் ருஷ்யாவுக்கு வெளியே ருஷ்யர்களுக்கும் நேரும். ஆகவே, ருஷ்யர்கள் அவர்களது 1939ஆம் வருட எல்லைக்கு அப்பால்