உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
148 ||

அப்பாத்துரையம் - 6



வெல்வதற்கு, சோவியத் படைகளால் இயலுமென்று என்னால் நம்பமுடியவில்லை. இன்னொரு எண்ணமும் தோன்றுகிறது. பிரிட்டன் அமெரிக்கா ருஷ்யா இம் மூன்றுக்குமிடையே எந்தவித ஒப்பந்தமும் ஏற்படாததால், நேச தேசங்களின் வெற்றி ஐரோப்பாவின் தலைவிதியை எப்படி நிர்ணயிக்கும் என்பது எவருக்கும் தெரியாது. பெரும் பகுதி ஐரோப்பாவில் ஆங்கிலேய அமெரிக்கரின் லட்சியமும் சோவியத்தின் லட்சியமும் முரண்பட்டிருக்கின்றன.

மற்றொரு ருசிகரமான விஷயம். ஐரோப்பாவில் தங்கள் பிரவேசத்தைப்பற்றி ஆங்கிலேய அமெரிக்கர்கள் உரத்த குரலில் பிரமாதமாக விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில், “போர்முனையை அகலப்படுத்தி பிரான்ஸுக்குள்ளே ஆள் பலத்தையும் சாதன பலத்தையும் அள்ளியிறைக்க ஆங்கிலேய அமெரிக்கர்கள் பின்வாங்கினால், ஜெர்மன் ராணுவத்தால் ஒருநாள் அழிவு நேர்ந்தே தீரும்” என்று, இரண்டாம் போர்முனை குறித்து சோவியத் அயல்நாட்டுக் காரியாலய அறிக்கை ஆங்கிலேய அமெரிக்கர்களை எச்சரிக்கையும் செய்கிறது.

இன்னொரு விஷயத்தையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும், உதாரணமாக பிரஞ்சு வட ஆப்ரிக்கா ஸிரியா - எகிப்து ஈரான் ஆகிய இடங்கள்பற்றி சோவியத்துக்கிருக்கும் எதிர்ப்பு மனப்பான்மை, ஆங்கிலேய அமெரிக்கர்களுக்குப் பிடிக்கவில்லை. தவிர போலந்து-பின்லாந்து- பால்கன் ஆகிய இடங்களில் சோவியத் நடத்தும் போருக்கு ஆதரவு கொடுக்க, ஆங்கிலேய அமெரிக்கர்களுக்கு விருப்பமில்லை. ஆதலால் 1912-ஆம் வருடத் துருக்கி யுத்தத்தில் பால்கன் நாடுகளுக்கு நேர்ந்த நிலைமை ஒருகால் நேச நாடுகளுக்கும் நேரலாம். அப்பொழுது, 1939-ஆம் வருடத்திய ருஷ்ய எல்லையைத் தாண்டி சோவியத் முன்னேறத் தொடங்கினால், ஆங்கிலேய அமெரிக்கருக்கும் சோவியத் ருஷ்யருக்குமிடையே வெறுப்பும் அவநம்பிக்கையும் எதிர்பாராத வகையில் தலைவிரித்தாடும். அதோடு பெருங் குழப்பமும் ஏற்படும்.