உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 157

சக்தியுள்ளது. தாய்நாட்டின் விடுதலைக்காக நம் ராணுவத்தினர் அனைவரும் பொதுலட்சியத்தின் மீது ஒன்றுபட்டு நிற்கின்றனர். முழு வெற்றியடையும் வரை எவ்வளவு காலம் நீடித்தாலும், நம் ராணுவ அதிகாரிகள் நிமிர்ந்து நின்று போராடும் ஆற்றல் பெற்றுள்ளனர். நமது அடிப்படையில் ஒழுங்கும் நியதியும் திறம்பட அமைக்கப்பட்டிருக்கின்றன. பகதூர் ஷாவின் வீரச்செயல்களும் உதாரணமும் நம் நினைவில் பதிந்து, நம்மை ஊக்குவிக்கின்றன. எனவே, இறுதி வெற்றி நமக்குத் தான் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்க முடியுமா?

1857-ஆம் வருடப் புரட்சி தலைகீழாக வீழ்ச்சிபெற்ற பின்னர், பிரிட்டிஷார் கையாண்ட அட்டூழியங்களைப் படிக்கும்போதும் அவைகளை நினைக்கும்போதும், என் இரத்தம் கொதிக்கத் தொடங்குகிறது. நாம் மனிதர்களாக யிருந்தால், 1857லும் அதற்குப் பின்னரும் நம் வீரர்களுக்கு நேர்ந்த கதிக்குப் பழி தீர்த்துத்தானாக வேண்டும். பிரிட்டிஷாரின் மிருகத்தனத்துக்கு, அவ்வீரர்கள் ஆளாகி அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவைகளை யாராலும் சகிக்க முடியாது. பிரிட்டிஷார் யுத்த காலத்தில் மட்டுமல்ல, பின்னருங்கூட விடுதலை விரும்பிய இந்தியர்களின் இரத்தத்தைச் சிந்தினார்கள்; மனிதத் தன்மையற்று சித்திரவதை செய்தார்கள். அக்கொடுமைகளுக்கெல்லாம் அவர்கள் பழி கொடுத்துதான் ஆகவேண்டும். இந்தியா விரும்புவதெல்லாம் பழிக்குப்பழி என்பதுவே. இந்தியர்களாகிய நமக்கு, இன்னும் பகைவன்மீது அவ்வளவு வெறுப்பு வளரவில்லை. உங்கள் தேசத்தார் நிமிர்ந்து நின்று மனித சக்திக்கு மீறிய வீரத்துடன் திகழவேண்டுமென விரும்பினால், நீங்கள் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். தேசத்தின்மீது அன்பு செலுத்துவதற்கு மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; பகைவனை வெறுக்கவும் கற்றுக் கொடுத்துதானாக வேண்டும்.

ஆகவே, நான் இரத்தம் சிந்துவதற்காக அழைக்கின்றேன். பண்டு செய்த கொடுமைகளுக்கெல்லாம் அந்தப் பகைவனின் இரத்தம்தான் ஈடுசெய்ய முடியும். நாம் நமது இரத்தத்தைச் சிந்தத் தயாராக இருந்தால்தான், அவர்களின் இரத்தத்தைக் குடிக்க முடியும். எனவே நமது எதிர்காலத் திட்டம் இரத்தம்