உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
214 ||

அப்பாத்துரையம் - 6



முன்பின் அறியாதது. சிறைப்பட்டவர்களை ஒருவர் விடாமல் அவன் கொன்று வீழ்த்தினான். குடிமக்களைத் தொகுதி தொகுதியாகத் திரட்டித் தொலை நாடுகளில் சென்று பிழைத்து அவதியுறும்படி அனுப்பி வைத்தான்.

அரசியல் நோக்குடன் மதிப்பிட்டாலன்றி, மலபாரில் ஹைதர் கையாண்ட முறைகள் தூயவீரனான அவன் புகழுக்குக் களங்கம் தருபவையேயாகும். ஆனால், வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய முத்திசையிலும் பகைவர்களுடன் போராட வேண்டிய நிலையிலிருந்த மைசூருக்கு, நாலாவது திசையில், மேற்கு மலைத் தொடரின் நிழலில் ஒதுங்கியிருந்த மலபாரின் அமைதி மிக இன்றியமையாததாயிருந்தது. ஹைதரின் கடு நடவடிக்கைகள் கூட, இவ்வகையில் அவனுக்கு முழுதும் பயன்படவில்லை என்பதை அவன் பின்னாளைய வரலாறு காட்டுகிறது.