உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

95

அவர் சிற்றப்பனார் வேடிக்கையாகவே 'உருக்கணக்கிய’லில் (Algebra) அவருக்கு ஆர்வமூட்டியிருந்தார்."கிட்டாத விசையைக் 'கி' என்று வைத்துக்கொண்டு கணக்குப் போடு. பின் கிட்டிய விடையிலிருந்து 'கி' கிடைத்துவிடும்” என்று அவர் கூறி உருக்கணக்கியலில் ஐன்ஸ்டீனை ஊக்குவாராம்!

பள்ளிப்பாடமாகப் புதிதாக வாங்கப்பட்ட ஒரு 'வடிவியல்’ நூல் (Text-book of geometry) கூட அவருக்கு ஒரு புனைகதை (Novel) ஆயிற்று. வாழ்க்கையின் அனுபவச் செய்திகளைப் படத்துடன் விந்தைகளாக விளக்கும் அந்த நூல் ஒன்றிரண்டாண்டுக்குரிய பாடமாக இருந்தது. அதை அவர் ஒன்றிரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே ஆர்வத்துடன் படித்து முடித்துவிட்டார். அதற்குள்ளாகவே அது அவருக்கு முழுதும் பாடமாகியும் விட்டது. பள்ளியில் ஆண்டு முழுவதும் அவர் அந்நூலில் ஆசிரியரின் முன்னோடியாய் விட்டார். ஆசிரியர் கற்பித்ததில் அவருக்கு ஒன்றும் புதுமையில்லாது போயிற்று! ஆயினும் தாம் அறிந்ததை ஆசிரியர் வருந்தி வருந்திக் கற்பிப்பது அவருக்கு ஒரு புதுச்சுவை தந்தது.

உயர்தரப் பள்ளி யூதர்களுக்குரியது. அதில் முதல் தடவை யாக அவர் யூத சமய ஏடுகளைக் கற்றார். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் ஒருங்கே திரு நூலாய் அமைந்த விவிலிய நூலின் பழைய ஏற்பாடு அவர் சமய உணர்வையும் ஆர்வத்தையும் தட்டி எழுப்புவதாயிருந்தது.

வீட்டில் வில்யாழ் (Violin) வைத்து அவருக்கு இசைப் பயிற்சி அளிக்கப் பட்டது. பள்ளிக் கட்டுப்பாட்டுடன் ஒரு வேண்டாக் கட்டுப்பாடாகவே அவர் இதையும் முதலில் கருதினார். ஆனால், 12 வயதுக்குள் மோஸார்ட் (Mozort) பீதவன்,21 முதலிய இசைமன்னர் உருப்படிகளில் ஈடுபாடு தோன்றியபின், வில்யாழ் அவர் வாழ்க்கையின் நீங்கா இன்பங்களுள் ஒன்றாயிற்று.

போலி மருத்துவச் சான்று

ஐன்ஸ்டீனுக்குப் பதினைந்தாண்டு திகையும் சமயம் அவர் தந்தை வாழ்வில் மீண்டும் மாறுதல் ஏற்பட்டது. மியூனிச்சில் அவர் தொழில் சீர்குலைந்தது. 1894-ல் அவர் இத்தாலியிலுள்ள மிலான் நகருக்குச் சென்று தம் வாழ்வைச் செப்பம் செய்ய