உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 7

பள்ளியில் சேர்ந்தார். பெயரே அப்பள்ளியின் தன்மையைச் சுட்டிக் காட்ட வல்லது. உடற் பயிற்சியைப் போலவே கிரேக்க இலத்தீன மொழி இலக்கணங்கள் அடித்து உடம்பில் படியவைக்கப்பட்டன. ஐன்ஸ்டீன் பின்னாட் களில் இப் பள்ளிகளைப் படைத்துறைப் பள்ளிக் கூடங்களுக்குரிய பக்க மேளங்கள் என்று கருதினார். பிள்ளைகள் படை வீரர்களாகவும், ஆசிரியர் நான்முறைப் பயிற்சி ஆசான்களாகவு, பள்ளித்தலைவர் படைத் தலைவராகவும் அவருக்குக் காட்சியளித்தனர்.

ஆசிரியர்கள் பொதுவாகக் கற்பிப்பதில் தாமும் ஆர்வம் காட்டியதில்லை. மாணவர்களிடமும் அவர்கள் ஆர்வம் ஊட்டக் கருதியதில்லை. சிறப்பாக, கிரேக்க இலத்தீன ஆசிரியர்கள் அப் பண்டை நாடுகளின் பண்பாடுகளின் மீது ஆர்வம் கொண்டது மில்லை. அதைத் தூண்டியதுமில்லை. ரூஸ்(Ruess) என்ற ஓர் ஆசிரியர் மட்டும் இதற்கு விதிவிலக்காயிருந்தார். அவர் வகுப்புக்கள் எவ்வளவு நீளமாயிருந்தாலும் ஐன்ஸ்டீன் சோர்வுறுவதில்லை. அந்த ஒரு ஆசிரியரை மட்டும் ஐன்ஸ்டீன் என்றும் மறவாமல் ஆர்வத்துடன் உள்ளத்தில் நேசித்து வந்தார்.

பின்னாட்களில் ஐன்ஸ்டீன் தமது 30-வது வயதில் இந்த ஆசிரியரைக் காணச் சென்றபோது, அவர் ஆர்வம் பெரிதும் புண் பட்டதாம். நல்லாசிரியராயிருந்ததனால் ‘ரூஸூ’க்குக் கிட்டிய விளைவு வறுமை, மனக்கசப்பு ஆகியவையே. எனவே, தம்மை ஆர்வத்துடன் ஒரு மாணவர் நாடி வரக்கூடும் என்பதையே அவர் நம்பவில்லை. தம்மை அவமதிக்க வருவதாகவே எண்ணி அவர் வெளியே நழுவி விட்டாராம்!

அறிவியல் கலை ஆர்வம்

பள்ளிப் படிப்பில் அக்கறை செலுத்தாவிட்டாலும், ஐன்ஸ்டீன் அறிவியல் நூல்களைப் பள்ளிப்பாடங்களுக்குப் புறம்பாகவும் சென்று படித்தார். அவர் குடும்ப நண்பரான உருசிய யூதமாணவர் ஒருவர் அவருக்கு நூல்கள் தந்துதவினார். ஏரான் பெர்ன்ஸ்டீனின் 'பொதுமக்களுக்குரிய இயல்நூல்'('A Popular Book on Natural Science' by Aaron Barnstein) பியூக்னெரின் 'பொருளும் ஆற்றலும்' (‘Force & Mattar') முதலிய புத்தகங்களை அவர் ஆர்வத்துடன் பருகினார்.