அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
93
பிள்ளைகளை விஞ்சியவராயிருந்தார். அதன் விளங்காப் பகுதிகளை அவர் கத்தோ லிக்கப் பிள்ளைகளுக்கே விளக்கவும் முனைந்தார்! கத்தோலிக்க சமயம் வேறு, யூதர் சமயம் வேறு என்பதையே அவர் அன்று அறிய வில்லை. ஆகவே பள்ளியில் கத்தோலிக்கக் கருத்துக்களையும், குடும் பத்தில் யூதக் கருத்துக்களையும் அவர் வேற்றுமையின்றிக் கற்றார். இரண்டும் சேர்ந்தே அவரது அடிப்படைச் சமய உணர்வாயிற்று.
கட்டுப்பாட்டை விரும்பாத ஐன்ஸ்டீன் பகட்டான சமய வினை முறைகளையும் விரும்பவில்லை. ஆனால், சமய உணர் வையும், கட்டுப்பாடற்ற எளிய வினைமுறைகளையும் அவர் வெறுக்கவில்லை. இதன் பயனாக, சமய உணர்வையே கேலி செய்த தந்தையையும், வேறு சில உறவினரையும் மெல்லக் கண்டிக்கக்கூட இந்த வயதில் அவர் துணிந்தார்.
பொய்யில்லா மெய்யர்
தொடக்கப்
பள்ளியிலிருந்தே
பள்ளி வாழ்வின்
கட்டுப்பாடு, தண்டனைகள் ஆகியவற்றை அவர் வெறுத்தார். வாழ்க்கைக்குப் பயன்படாத பிறமொழி இலக்கணத்தை உருப்போடும் பயிற்சி முறைகளும் அவருக்குக் கசப்பாயிருந்தது. பிள்ளைகள் விரும்பிக் கற்பதே நற் கல்வி என்று அவர் கருதினார். பிள்ளைகள் விரும்பிக் கேட்கும் கேள்விகள் மூலம் விளக்கமளித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கை. ஆசிரியர் மாணவர் நட்புறவு அவர் விரும்பிய கல்விமுறையின் அடிப்படையாயிருந்தது.
அவர் தொடக்கப்பள்ளி வாழ்வில் ஒரு சிறப்பு உண்டு. எவ்வளவு தண்டனைகளைப் பெற்றாலும், அவர் குற்றத்தை மறைத்ததில்லை. பொய் சொல்வதைவிடத் தண்டனை பெறுவது அவருக்கு உகந்ததாயிருந்தது இதனால் அவர் 'பொய்மையில்லா மெய்யர்'(Honest John) என்று பிள்ளைகளிடையே அழைக்கப்
பட்டார்.
தனி ஒரு ஆசிரியர்
தொடக்கப்பள்ளி முடிந்தபின் அவர் லுயிட் பால்டு பயிற்சிக் கூடம் (Luitopold Gymnasium) என்ற மியூனிச் உயர்தரப்