உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

காந்த ஊசி

அப்பாத்துரையம் - 7

இத்தனைச் சூழலிலும் அறிவியலார்வம் மட்டும் குழந்தை ஐன்ஸ்டீனிடம் ஐந்து வயதிலிருந்தே எப்படியோ வளர்ந்தது. ஒருநாள் அவர் தந்தை ஒரு சிறிய திசைகாட்டும் கருவியை அவரிடம் தந்தார். விளையாட்டுப் பொருள்களையே நாடாத அவர், அதை விடாது சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். எந்தத் திசையில் திருப்பினாலும் அதன் காந்த ஊசி வடக்கிலேயே திரும்பியது கண்டு, அவர் குழந்தையுள்ளம் அடைந்த வியப்பார்வம் எல்லையற்றதாயிருந்தது.

“ஊசியைச் சுற்றியுள்ள வெட்ட வெளியிலே ஒன்றும் இருப் பதாகக் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அதை வடக்குத் திசைக்கே இழுக்கும் ஒரு சக்தி அந்த வெட்டவெளியில் நிறைந் திருக்கவேண்டும்," இவ்வாறு அறிவியல் குழந்தை ஐன்ஸ்டீன் எண்ணமிட்டது என்று அறிகிறோம்.

சமய உணர்வு

தாடக்கப் பள்ளிகள் அந்நாளில் தனித்தனி சமயக் கிளை களின் தலைவர்களாலேயே நடத்தப்பட்டன. பிள்ளைகள் நெடுந் தொலை சென்றாவது தத்தம் சமயக் கிளைப் பள்ளிகளில் பயில்வது வழக்கம். ஐன்ஸ்டீன் வாழ்ந்த இடத்தில் கத்தோலிக்கரே மிகுதியாய் இருந்தனர். பள்ளியும் கத்தோலிக்கர் நடத்திய பள்ளியாகவேயிருந்தது.

ஐன்ஸ்டீன்

குடும்பத்தினர்

பெயரளவிலேயே யூதராயிருந்தனர். யூத சமயத்திலோ வினைமுறையிலோ முனைத்தவராயில்லை. ஆழ்ந்த பண்புடைய சில யூதப் பழக்க வழக்கங்கள் மட்டுமே அவர்களிடம் படிந்திருந்தன. அத்துடன் வறுமையும் அவர்களை வாட்டிற்று. எனவே, ஐன்ஸ்டீன் தாய் தந்தையர் யூதர் பள்ளி தேடி அவரைத் தொலை தூரத்துக்கு அனுப்பத் துணியவில்லை. கத்தோலிக்கப் பள்ளியிலேயே அவர் கற்றார்.

பள்ளியில் அவர் ஒருவரே யூத மாணவராயிருந்தார். ஆயினும், இதனால் ஐன்ஸ்டீனுக்குத் தனித் தொல்லை எதுவும் நேரவில்லை. கத்தோலிக்க சமய அறிவில் அவர் கத்தோலிக்கப்