உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

அப்பாத்துரையம் - 7

வேலையில் எவ்வாறு ஈடுபட முடியும்? பேராசிரியர் இதற்கும் வழிவகுத்தார்.பணிமனை வேலையை விடாமலே ஆசிரியப்பணி செய்யும்படி அவர் ஐன்ஸ்டீனைத் தூண்டினார். ஐன்ஸ்டீன் இதற்கும் இணங்கினார்.

தேடிவந்த பதவி

புகழை ஐன்ஸ்டீன் நாடவில்லை. அவர் ஆராய்ச்சித் திறமை யால் புகழ் அவரை நாடிற்று. ஆனால், பதவியை அவர் நாடாமல் பதவி அவ்வளவு எளிதாக அவரை வந்தடையக்கூடும் என்று எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள். ஐன்ஸ்டீன் வாழ்வில் இந்தப் புதுமையும் விரைவில் இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தில் ஆசிரியப்பணியை அவர் பேராசிரியர் கிளைனருக்காகவே மேற்கொண்டார். அதில் அவர் பெயரெடுக்க விரும்பவுமில்லை. பெயர் எடுக்கவுமில்லை. பேராசிரியர் கிளைனரே ஒரு நாள் மாணவருடன் வந்து அமர்ந்திருந்தார். ஆராய்ச்சியறிஞர் ஆசிரியப்பணியில் ஒரு சிறிதும் அக்கறைகொள்ளவில்லை என்று அவர் கண்டார்.

வேண்டா வெறுப்புடனே பேராசிரியர் மற்றொருவர் பெயரைப் பரிந்துரைக்க நேரிட்டது. ஆனால், இந்த மற்றொருவர் ஜூரிச் பல்கலை நுணுக்கக் கூடத்தில் ஐன்ஸ்டீனுடன் பயின்ற ஆஸ்ட்ரிய இளைஞன் பிரீடரீக் ஆட்லராக அமைந்தார்.

ஐன்ஸ்டீனின் புகழ் இதற்குள் உலகப் புகழாகியிருந்தது. அதில் ஆட்லர் ஈடுபடும் பெருமையும் கொண்டார். ‘பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி ஐன்ஸ்டீனுக்குப் பெருமை தருவதன்று, பல்கலைக்கழகத்துக்குப் பெருமை தருவது, உலகுக்குப் பயனும் பெருமையும் தருவது' என்ற அவ் விளைஞர் எண்ணினார். ஐன்ஸ்டீனுக்கெதிராக நின்று அப் பதவியைப் பெறுவதன்மூலம் பல்கலைக் கழகத்துக்கும், ஆராய்ச்சி உலகுக்கும் கேடு செய்ய அவர் விரும்பவில்லை.

66

இக் காரணத்தால் அவர் பேராசிரியரிடம் சென்றார். "ஐயா, ஐன்ஸ்டீன் புகழை அறியாத பல்கலைக் கழகத்தில் நான் சேவை செய்ய விரும்பவில்லை. கொடுத்தால் பதவியை அவருக்கே கொடுங்கள். அதன் பின்னரே இந்தப் பல்கலைக் கழகத்தை நான் மதிப்பேன்,” என்று மனந்திறந்து கூறினார்.