உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

(107

ஆட்லர் அன்று ஆஸ்டிரியாவில் செல்வாக்கடைந்துள்ள ஆட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்; அதன் தலைவர் பிள்ளை. அவர் சொல்லைத் தட்டப் பேராசிரியர் கிளைனரும் விரும்பவில்லை. மற்றப் பல்கலைக் கழகப் பேராசிரியரும் விரும்பவில்லை. ஆகவே ஐன்ஸ்டீனே அப்பதவிக்கு அமர்த்தப்பட்டார்.

பதவி நாடாத ஐன்ஸ்டீனை இவ்வாறு பதவியும் தேடி வந்தடைந்தது. 1909-ல் அவர் முதல்முதலாக ஒரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரானார். பெர்ன் பதிவுரிமை நிலையப் பணிக்கு ஒரு முடிவு ஏற்பட்டது.

இளைஞர் தன்மறுப்பு

இந்நிகழ்ச்சியில் ஆட்லருக்குப் பங்கு உண்டு என்பது ஐன்ஸ்டீனுக்கு அப்போது தெரியாது. தெரிந்தபோது, அவர் ஆட்லர்மீது மகிழ்வும் பெருமித நல்லெண்ணமும் கொண்டார். தன்னலமும் சூழ்ச்சியும் நிறைந்த உயர் பணி உலகிலே, ஆட்லர் ஒரு தூய ஒளிமின்னலாக அவருக்குத் தோன்றினார்.

ஐன்ஸ்டீன் அறிவியலாராய்ச்சியின் சிறந்தவர் மட்டுமல்ல; மனிதப் பண்புணர்விலும் ஒப்புயர்வற்றவர். அறிவியல் உலகில் உள்ள அவர் பெருமையை நாம் அகற்றிப் பார்த்தால்கூட, அவர் பெருமை குன்றிவிடாது. ஏனெனில், அப்போதும் அவர் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய், ரோமேன் ரோலந்து ஆகியவர்கள் அருகே டம்பெறத்தக்க அருளாளாராயிருப்பார்.

ஆனால், அவர் மனிதப் பண்புள்ளம் கூட ஜெர்மன் பள்ளிகளின் அனுபவர்கள், ஜூரிச் பல்கலை நுணுக்கக் கூட அனுபவங்கள் ஆகியவற்றுக்குப் பின் மனித உலகின் தன்னலச் சிறுமைகளை எண்ணிப் புண்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆட்லர் நிகழ்ச்சி எதிர்பாரா இடத்தில், எதிர்பாரா முறையில் மனிதப் பண்பின் ஒரு விளக்கொளியை அவருக்குக் காட்டிற்று.

1915-ம் ஆண்டில் இதே ஸ்டியூர்க்4 என்ற ஓர் ஆஸ்ட்ரிய அமைச்சரை இளைஞர் ஆட்லர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

இச்செய்தி மீண்டும் ஐன்ஸ்டீனைப் புண்படுத்தி இருக்கும் என்பதில் ஐயமில்லை. உயர் பண்பும் உயர் குறிக்கோளும் உடைய இளைஞர்களைக் கூட அரசியல் சூழல் அதற்கு மாறான