உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

அப்பாத்துரையம் - 7

செயல்களில் தூண்டக்கூடும் என்பதை அச்செயல் அவருக்குக்

காட்டியிருக்கும்.

பண்பும் சூழலும்

எண்ணற்ற இளைஞர் பேரவா ஆர்வத்துடன், ஏக்கத்துடன் விரும்பிக் காத்துக்கிடந்தும் பெறாத புகழ், இப்போது ஐன்ஸ்டீன் காலடியில் கிடந்தது. எண்ணற்ற செல்வ இளைஞர்கள் பணங் கொடுத்தும், பாடுபட்டும் பெறக்காத்துக்கிடந்த பதவி பணி செய்து பிழைத்த ஏழையாகிய அவருக்கு எளிதாக வந்து கிடைத்தது. ஆனால், இரண்டிலும் அவருக்குப் பெருமையோ, மனநிறைவோ, பற்றோ ஏற்படவில்லை. பல்கலைக் கழகத்தில் அவர் வாழ்க்கை முறையும் பண்பும் இதைப் பட்டாங்கமாக எல்லாருக்கும் எடுத்துக் காட்டின.

மாணவர்கள்,

ஆசிரியர்கள்,

பேராசிரியர்கள் எல்லாருடனும் அவர் இனிமையுடனே பழகினார். பலர் எளிதில் அவர் நண்பராயினர். சிற்சில சமயம் மாணவருக்கு அவர் தம் ஆராய்ச்சிக் கருத்துக்களை இனிதாக எளிதான முறையில், அவரவர் மனத்தில் பதியும்படி எடுத்து விளக்கினார். அவர் ஓர் ஒப்பற்ற அறிஞர் மட்டுமல்ல, ஒப்பற்ற ஆசிரியரும் ஆவார் என்பதை மாணவர்கள் காணமுடிந்தது.

அவர் யாரையும் புண்படுத்தியதி ல்லை. உயர் பணியிடங் களில் மிகப் பொது நிகழ்ச்சியான சூழ்ச்சி எதிர் சூழ்ச்சிகள் எதிலும் அவர் ஈடுபடவில்லை. கடமை தவிர வேறு எதிலும் கருத்துச் செலுத்தாத அத்தகு கண்ணியரை எவரும் கண்ட தில்லை.

ஆயினும் இத்தனை பண்புகளும் கூடப் பல்கலைக்கழக வாழ்வுடன் அவர் வாழ்வு முற்றிலும் பொருந்தும்படி செய்யவில்லை.

இதற்குக் காரணம் வளைந்து கொடுக்காத அவர் மனிதப் பண்பிலேயே இருந்தது.

மாணவர், ஆசிரியர், பேராசிரியர் யாவரிடமும் அவர் ஒரே நிலையுடன், மனிதருடன் மனிதராகவே பழகினார். சரிநிகரானவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய வேறுபாடுகளை