4. பேராசிரியர்
(1909
-
1914)
சமயம், இலக்கியம், கலை, அரசியல் ஆகிய துறைகளில் நாம் முடிசூடா மன்னரை - மிகப் பலர் ஆற்றலையும் செயலையும் ஒரு தனி மனிதர் ஆற்றலாகவும் செயலாகவும் கொண்ட மாபெரிய மாந்தரைக் காணல் கூடும். அறிவுத் துறையில் கூடப் பண்டை உலகிலோ, அறிவியல் ஆராய்ச்சியின் விடியற் பொழுதாகிய நியூட்டன் காலத்திலோ இத்தகைய பெரியார்களுக்கு இடமுண்டு. ஆனால், அறிவியலாராய்ச்சி ஊழி முற்றிலும் குடியாட்சி ஊழியாய் அமைந்துள்ளது. இங்கே பெருமை உண்டு, வளர்ச்சி உண்டு; ஆனால் அது காலத்தின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சி பல்லாயிரம் தனிமனிதர் அதில் பங்கு கொள்கின்றனர் - ஆனால், மிகப்பெரிய அளவில் அதில் பங்குகொண்ட தனிப் பெரும் பெரியாரை அதில் காண்பது அருமை. ஆயினும் 20-ம் நூற்றாண்டில் உலகில் மீண்டும் ஓர் ஊழி மாறி மற்றோர் ஊழி தொடங்கும் திருப்பத்தில், அத்தகைய ஒரு முடிசூடா மன்னனாக ஐன்ஸ்டீன் காட்சியளிக்கிறார்.
அவர் பேராசிரியர் பணி இதனைப் பலவகையில் விளக்கு வதாக அமைகிறது.
பீடுமிக்க பெருவாழ்வு
தனிமனிதர் ஆராய்ச்சிக்குப் புகழும் மதிப்பும் நற்சான்றும் அளிப்பவை பல்கலைக் கழகங்கள் போன்ற புகழ் நிலையங்கள். ஆனால் அவர் தொடர்பால் பெருமையும் புகழும் பெற அவை போட்டியிட்டன. அவருக்கு முன் உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி யாளர்கள், அவரால் முன்பமாதிரியாக ஆசான்களாக மதிக்கப்பெற்ற புகழ் மன்னர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அவர்