அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
111
புது விளக்கங் களைக் கேட்க, அவர் ஆராய்ச்சியுரைகளால் புதுத் தூண்டுதல் பெற விரைந்தனர். பல்கலைக் கழக மாணவர், கல்லூரி மாணவர் என்ற நிலையில் மாணவர்கள் அவரை அணுகவில்லை. அவர் புகழ் மாணவராக இடம்பெற அவாக்கொண்டு அவர்கள் அவரை நாடினர். ஆட்லர் அவரிடம் காட்டிய மதிப்பு இதற்கு ஒரு முனிமுகமே யாகும்.
ஜூரிச் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளருடனொத்த ஆராய்ச்சியாளரான அவருடன் பணியிலமர்ந்தவர் டேவிட் ரீக்கின்ஸ்டீன் என்பவர்.(David Relehinstein) அவர் ஐன்ஸ்டீனைத் தம் தலைவராகக் கருதி, அவர் புகழ்ப்பணியில் தலைநின்றார். ஆல்பெர்ட் ஐன்ஸ்டீ னுடன் கொண்ட புகழ்த் தொடர்பை அடிப்படையாகக் கொண்டு, அவர் ஐன்ஸ்டீனின் வாழ்க்கைப் பண்போவியம் தீட்டினார். இது போலவே பிரேக் பல்கலைக் கழகத்தில் அவர் பேராசிரியப் பணியில் அவருக்குப்பின் அமர்ந்த பேராசியர் பிலிப் பிராங்க், (Philip Prcenk)அவரும் ஐன்ஸ்டீன் புகழ் வரலாறு எழுத முன்வந்தார்.
ஐன்ஸ்டீனால் நன்கு மதிக்கப்பட்ட, ஐன்ஸ்டீன் பின் பற்றிய புகழ் மன்னர் எர்னஸ்ட் மாக். அவர் ஐன்ஸ்டீன் புகழ் கேட்டு அவர் தொடர்பால் பெருமையடைய அவாவினார்.
இத்தனை புகழுக்கிடையில் இகழும் வராமலில்லை. பெர்லினில் அவர் பேராசிரியப் பணியிலிருந்தும் தாயகத்திலிருந்தும் துரத்தப்பட்டு, ஜெர்மானிய ஆட்சியாளரின் தூற்றலுக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். இரு ரு தடவை தாயகத்தின்தாய்மை உரிமையிழந்து, மீண்டும் தாய்மை தேடும் படலத்தில் அவர் இறங்கவேண்டி வந்தது.
புகழிலும் இகழிலும் ஐன்ஸ்டீனின் மாறாத உறுதிப் பண்பு அருட்பெரியார் வாழ்க்கையிலும் எளிதில் காண முடியாத ஒன்று ஆகும். புகழில் அவர் மகிழவில்லை. இகழில் அவர் தளரவு மில்லை. அவர் குறிக்கோள் என்றும் ஒரு படியாகவே இருந்தது. உலகின் புகழ், இகழ் ஆகியவற்றின் சிறுமையையும் வெறுமையையும் விளக்கும் ஒருமாய விளக்கமாக அவர் பேராசிரியப் பணியின் வரலாறு அமைந்துள்ளது.