உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

அப்பாத்துரையம் - 7

ஆராய்ச்சி வெளியீடுகள் பிரேக் வாழ்வின்போது வெளிவந்தன. 'ஒளி இயக்கத்துறையில் ஈர்ப்பாற்றலின் தொடர்பு’29 என்ற கட்டுரை 1911-லும், 'ஒளி நுண்ம இயைபியல் ஒப்பீட்டமைதியும் அதன் வெப்ப-விசை ஆற்றல் அடிப்படையும்'(Photochenicad Basic the Veidctry of Light)என்ற கட்டுரை 1912-லும் வெளியிடப்பட்டன.

முதற்கட்டுரை தனி ஈர்ப்பாற்றல் உடைய நிலஉலகம் போன்ற மண்டலங்களில் ஒளி மற்றப் பொருள்களைப் போலவே ஈர்ப்பாற்ற லுக்கு ஆளாகிறது என்ற முடிவை விளக்கிற்று. இதை நேரடியாகத் தேர்ந்து பார்க்கவும் அவர் ஒரு வழி காட்டினார். நிலைமாறா விண்மீன்களின் ஒளி கதிரவன் மண்டலத்தருகே வரும்போது, அம் மண்டலத்தின் ஈர்ப்பாற்றலால் விலகுமென்றும், இதைக் கதிரவன் மறைவின்போது காணலாம் என்றும் அவர் அறிவித்தார்.

அடுத்த கதிரவன் மறைவு 1914-லேயே ஏற்பட்டது. வான நூலார் ஐன்ஸ்டீன் முடிவின் மெய்ம்மையைத் தேர்ந்துணர நெடுந் தொலை செல்ல முனைந்தனர். ஆனால், முதல் உலகப்போர் அறிவியலின் இம் முக்கியமான நடைமுறையைத் தடுத்தது.

போர் முடிந்தபின் அடுத்த கதிரவன் மறைவின்போது மீட்டும் தேர்வு 1919-ல் தொடரப்பட்டது.வியக்கத்தக்க முறையில் ஐன்ஸ்டீன் முடிவு மெய்ப்பிக்கப்பட்டது.

“ஒளியலை பற்றி ஆராயாத பைத்தியக்காரர்கள்”

இரண்டாவது கட்டுரை ஒளிபற்றி அந்நாள் நிலவிய இரண்டு கோட்பாடுகளின் முரண்பாடுகளை விளக்க முனைந்தது. ஒரு கோட்பாடு ஒளி அலைகளாகப்31 பரவுகின்றது என்பது. மற்றது அது அணுக்களாக, குறிப்பிட்ட தொகுதி யளவுகளாகப்32 பரவுடிகறது என்பது.

இவ்வாராய்ச்சியில்

ஈடுபட்டிருக்கும் சமயம் அவருக்குப்பின் அவரிடத்தில் பேராசிரியரான அவர் நண்பர் பிலிப் பிராங்க் ஐன்ஸ்டீனுடன் இருந்தார். இருவரும் பல்கலைக் கழகப் பலகணி களின் வழியாக அதன் பின் புறத் தோட்டத்தின் பக்கமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.

அத்தோட்டம் உண்மையில் பிரேக் நகரின் பைத்தியக்காரர் விடுதியைச் சேர்ந்தது, இது பேராசிரியர் பிராங்குக்கு அப்போது